பொது செய்தி

தமிழ்நாடு

நடுவார்களா

Added : செப் 12, 2020
Share
Advertisement

நாட்டின் வளர்ச்சியில் சாலை விரிவாக்கம் அவசியமானதே. அதற்காக ரோட்டோர மரங்கள் வெட்டப்படுவதும் தவிர்க்க முடியாததே. ஆனால், வெட்டப்படும் மரங்களுக்கு பதிலாக அதே அளவில் புதிய மரங்களை உருவாக்குவதில்லை என்பதும் கசப்பான உண்மையே.

திண்டுக்கல் மாவட்டத்தைப் பொறுத்தவரை திண்டுக்கல், திருச்சி, நத்தம், பழநி ரோடுகள், ஒட்டன்சத்திரம் - வடமதுரை ரோடுகள், நத்தம் -- மதுரை ரோடு, பழநி நகரை திருப்பதியைப் போல நவீன மயமாக்கல் என்ற பெயரில் என ஆயிரக்கணக்கான பழமையான மரங்கள் வெட்டப்பட்டுள்ளன.இதனால் இவற்றை நம்பிய புழுப்பூச்சிகள் உட்பட பல உயிரினங்கள் பாதித்துள்ளன. இயற்கை சமநிலையும் பாதிக்கிறது. ஒரு மரம் வெட்டினால் 10 மரங்கள் நடப்பட வேண்டும் என்பது விதி. ஆனால் சில மரங்கள் கூட இதுவரை நடப்படவில்லை.இயற்கையை பாதுகாக்க வேண்டும்.திண்டிமாவனம் அமைப்பின் உறுப்பினர் மு.ராஜாராம் கூறியதாவது: ஐந்து ஆண்டுகளில் சாலை விரிவாக்க பணிகளுக்காக லட்சக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டுள்ளது.

இதன் பாதிப்பு வரும் காலங்களில்தான் தெரியும். முடிந்தவரை மரங்களை இடமாற்றம் செய்யலாம். இல்லையெனில், வெட்டிய ஒரு மரத்திற்கு 10 மரக்கன்றுகளை நட வேண்டும். சாலை பணிகள் நடைபெறும் போதே இதனையும் செய்ய வேண்டும். சாலை விரிவாக்க பணிகளுக்கு ஒதுக்கப்படும் தொகையில் 10 சதவீதம் இயற்கையை பாதுகாக்க பயன்படுத்த வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X