சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : செப் 12, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
 'டவுட்' தனபாலு

பிரதமர் மோடி: பிற நாடுகளை ஒப்பிடும்போது, இந்தியாவில் சுகாதார முறை சிறப்பாக உள்ளது. இதன் காரணமாக, கொரோனாவில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை, இந்தியாவில் அதிகமாக உள்ளது. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை, மக்கள் இயக்கமாக மாற்றி வருகிறோம். உலகிலேயே, கொரோனாவில் இருந்து வேகமாக மீளும் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.

'டவுட்' தனபாலு: நீங்கள் இப்படி சொல்கிறீர்கள். ஆனால், உலக அளவில், கொரோனாவால் அதிக உயிரிழப்பை சந்தித்த நாடு என்ற அடையாளத்தை, இந்தியா விரைவில் பெறும் என, வல்லுனர்கள் கூறுகின்றனர். அவர்கள் சொல்வது தவறோ என்ற, 'டவுட்' உங்கள் பேச்சு மூலம் ஏற்படுகிறதே!


காங்., தேசிய தலைமை:
மத்தியில் ஆளும், பிரதமர் மோடி தலைமையிலான அரசின், பொதுமக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை கண்டிப்போம் வாருங்கள். மோடி அரசின் திட்டங்கள், கோடிக்கணக்கான இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறித்துள்ளன; அவர்களின் வாழ்க்கையை இருட்டாக்கியுள்ளன. வேலை கேட்டுப் போராட தயாராவோம்.

'டவுட்' தனபாலு: மத்திய அரசுக்கு எதிராக என்னவெல்லாமோ சொல்லிப் பார்த்தீர்கள்; எதுவும் நடக்கவில்லை. மாறாக, காங்கிரசிற்கு தான், பல மாநிலங்களில் பலத்த அடி விழுந்தது. அதனால் தான், மக்களின் உணர்வுகளை தொடும் விதமாக, வேலைவாய்ப்பு பிரச்னையை கிளப்புகிறீர்களோ என்ற, 'டவுட்' இளைஞர்களுக்கு வந்துள்ளது.நடிகை குஷ்பு:
சிலர் முக கவசம் இன்றியும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும், கும்பலாகக் கூடி நிற்கின்றனர். இது தான், நம் மக்கள் காட்டும் சமூகப் பொறுப்பு. கொரோனா தற்போது, அறிகுறி இல்லாமல் வருகிறது. மக்கள், தங்களின் உயிரைப் பணயம் வைப்பது மட்டுமல்லாமல், அவர்களுடன் தொடர்பு கொள்ளும் நபர்களின் உயிரையும் பணயம் வைக்கின்றனர்.

'டவுட்' தனபாலு: மடி, ஆச்சாரம் என பெரியவர்கள் சொல்லிக் கொடுத்த விஷயங்களை, கேலி கிண்டல் செய்து ஒதுக்கியதற்கான பலனை அனுபவிக்கிறோம். உயிரே பறிபோகும் நிலை ஏற்பட்டால் கூட, அது போன்ற பழக்கங்களைப் பின்பற்ற, யாரும் முன் வரப் போவதில்லை என்பதில், 'டவுட்'டே இல்லை!தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன்:
நான் என்றைக்கும், தி.மு.க.,காரன் தான். அன்றைக்கு உள்ள உணர்வு தான், இன்றும் உள்ளது. பொதுச்செயலர் ஆனவுடன் கொஞ்சம் பொறுப்பு அதிகமாகி உள்ளது. கட்சியில், நான் பெற்ற அனுபவத்தை வைத்து, அதை கையாள்வேன். 'சட்டசபை சூப்பர் ஸ்டார்' என, என்னை, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியதை வரவேற்கிறேன்.

'டவுட்' தனபாலு: தி.மு.க.,வை பொறுத்தவரை, பொதுச் செயலர் பொறுப்பு, வெறும், 'ரப்பர் ஸ்டாம்பு' போன்றது தான். தி.மு.க., தலைவர் பதவி தான், முக்கியமானது. எனவே, பொதுச் செயலர் பதவியால், பொறுப்பு அதிகரித்துள்ளது என நீங்கள் கூறுவது, 'மவுனமாக இருக்க வேண்டிய பொறுப்போ' என்ற, 'டவுட்'டை ஏற்படுத்துகிறது!

காங்., முன்னாள் தலைவர் ராகுல்: சீன அரசு, நம் நிலத்தை ஆக்கிரமித்துள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட நம் நிலத்தை திரும்பப் பெற, மத்திய அரசு என்ன செய்யப் போகிறது அல்லது 'இதுவும் கடவுளின் செயல்' என, கைவிட முடிவு செய்யப்பட்டு விட்டதா?

'டவுட்' தனபாலு: நீங்கள் இப்படி கேட்பதால், நடுநிலையாளர்களுக்கு, இப்படியும் ஒரு, 'டவுட்' வருகிறது... ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக, மத்தியில் ஆட்சியில் இருந்த காங்., பாகிஸ்தான் பிடியில் உள்ள, ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க என்ன நடவடிக்கை எடுத்தது; அந்த பகுதியை கைவிட்டு விட்டதா என்பன போன்ற பல, 'டவுட்'டுகள் வருகின்றன.நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
: எவ்வளவோ பேரை எதிர்த்து அரசியல் செய்திருக்கிறேன்; சிறைபட்டிருக்கிறேன். துளிகூட கலங்கியது இல்லை. சொந்த பிள்ளை போல வளர்த்த கட்சி நிர்வாகிகள் சிலர், 'தலைமை சரி இல்லை' என்கின்றனர். 'கோடி கோடியாக பணம் வந்தது' என்கின்றனர். எங்கிருந்து பணம் வந்தது... வெளிப்படையாக சொன்னால், அவர்கள் என் சாவை எதிர்பார்க்கின்றனர்.

'டவுட்' தனபாலு: நாட்டின் பெரும்பாலான மக்களுக்கு பொருந்தாத, திட்டங்கள், கொள்கைகளை வாய் கிழிய அறிவிப்போர், கதி இப்படித் தான் ஆகும் என்பது, நடுநிலையாளர்களின், 'டவுட்' இல்லாத எண்ணம். அதுபோல, வெறும் மேடைப் பேச்சு, இப்படித் தான், கட்சிக்குள் கலகத்தை உருவாக்கும் என்பதையும் நீங்கள், 'டவுட்' இன்றி, இப்போது புரிந்திருப்பீர்களே!

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
13-செப்-202015:56:19 IST Report Abuse
Anantharaman Srinivasan கட்சி நிர்வாகிகள் சிலர், 'தலைமை சரி இல்லை' என்கின்றனர். 'கோடி கோடியாக பணம் வந்தது' என்கின்றனர். வெளிப்படையாக.. கட்சிக்காரன் உள்ளதை சொன்னான். நீயோ பொய்யை சொல்லி உண்மையை மறுப்பவன். சத்தம்போட்டு அலறுவதால் எல்லோரும் ஏமார்ந்து விட மாட்டார்கள். சிலரை சில காலம்தான் ஏமாற்றாலாம்.......
Rate this:
Cancel
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
13-செப்-202015:47:29 IST Report Abuse
Anantharaman Srinivasan தி.மு.க.,வை பொறுத்தவரை, பொதுச் செயலர் பொறுப்பு, வெறும், இங்க் இல்லாத பேனா.
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
13-செப்-202006:11:03 IST Report Abuse
D.Ambujavalli மக்களின் பொறுப்பு இருக்கட்டும் விளம்பரத்துக்காக, கட்சி பேதமில்லாமல் கூட்டம் கூட்டி, ஐம்பது 'ஆராத்திப் பெண்டிரை' நிறுத்தி என்று ஆட்டம் போடும் தலைவர்கள் ஒருபக்கம் நூறு பேருந்துகள் ஓடுமிடத்தில் ஐம்பது. அவரவர் வேலைகளுக்கு செல்ல பரபரப்பு. இதில் 'விதிப்படி நடக்கட்டும்' என்று பறக்க த் தான் தோன்றுமே ஒழிய உடன் பயணிப்பவரிடம் அட்வைஸ் செய்து வாங்கிக்கட்டிக்கொள்ள யார் முன் வருவார்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X