பொது செய்தி

தமிழ்நாடு

மூத்த பத்திரிகையாளர் சுதாங்கன் காலமானர்

Updated : செப் 13, 2020 | Added : செப் 12, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

சென்னை: டிவி மற்றும் பத்திரிகை துறையில், சினிமா முதல் அரசியல் வரை பல்வேறு கதைகளை எழுதி சாதனை படைத்துள்ள மூத்த பத்திரிகையாளர் சுதாங்கன்(63) நுரையீரல் கோளாறு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.

கடந்த சில நாட்களாக அவர், உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.சுதாங்கனுக்கு ஆகாஷ் என்ற ஒரு மகன் இருக்கிறார். அவரது மனைவி சாந்தி 2006-ஆம் ஆண்டு காலமானார். நாற்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், ஒரு குறுநாவல், ஒரு தொடர்கதை சுதாங்கன் எழுதியுள்ளார்.

கடந்த 1978ல் ''திசைகள்'' வார நாளிதழில் தனது பத்திரிகையாளர் பணியை துவக்கிய அவர், பின்னர் 'குமுதம்' நாளிதழில் பணியாற்றினார். 'ஜூனியர் விகடன்', 'தினமணி' மற்றும் ' தமிழன் எக்ஸ்பிரஸ் ' நாளிதழிலும் பணியாற்றியுள்ளார்.

சுதாங்கனின் இயர்பெயர், ரங்கராஜன் ஆகும். பின்னர், குமுதம் நிறுவனத்தில் ஏற்கனவே ஒரு ரா.கி.ரங்கராஜன் இருந்ததால், தனது பெயரை சுதாங்கள் என மாற்றி கொண்டார்.

தமிழன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் அவருடன் பணியாற்றிய காசிநாதன் என்பவர் கூறுகையில், தமிழ் இதழ்களில், புலனாய்வு செய்திகளுக்கு பெயர் போனவர், சுதாங்கன். அவ்வகையில், அவர் ஏராளமான புலனாய்வு கட்டுரைகளை எழுதியுள்ளார். புலனாய்வு கட்டுரைக்கு, தமிழகத்தில் முகம் கொடுத்தவர் சுதாங்கன்தான். தற்போது டிவி மற்றும் தமிழ் நாளிதழில் பணியாற்றும் சில இளம் பத்திரிகையாளர்களுக்கு சுதாங்கள் பயிற்சி கொடுத்துள்ளார். எந்த ஒரு விஷயத்திலும் ஆழமாக சென்று அலசி ஆராய்வதே அவரது சிறப்பு. அவருக்கு உதவும் மனப்பான்மை கொண்டவர். சிறந்த தலைமைப்பண்பும் உள்ளவர்.

' ஜூனியர் விகடன் ' மூலம், புலனாய்வு பத்திரிகை துறையில் ஏற்பட்ட அலைக்கு சுதாங்கள் தலைமை தாங்கினார். இதன் பின்னர், டிவி துறைக்கு மாறிய அவர் ராஜ்டிவி, விஜய் டிவி மற்றும் ஜெயாடிவியில் பணியாற்றியுள்ளார்.
அதிமுக நிறுவனர் எம்ஜிஆரை, நடிகர் எம்.ஆர்.ராதா சுட்டது விவகாரத்தை மையமாக வைத்து , '' சுட்டாச்சு சுட்டாச்சு'' என்ற புத்தகம் எழுதினார். இது அதிகளவில் விற்பனையானது.
சுதாங்கன் மறைவு மூலம், பத்திரிகை உலகம், ஒரு சாம்பியனை இழந்துவிட்டதாக, சென்னை ரிப்போர்ட்டர்ஸ் கில்ட்டின் ஆர். ரங்கராஜ் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், நான்கு தலைமுறையாக வலிமையான பத்திரிகையாளராக திகழ்ந்தவர் சுதாங்கன். இயக்குநர் கே.பாலச்சந்தருடன் பணியாற்றியுள்ள சுதாங்கன், எனது தந்தை கருணாநிதக்கு நெருக்கமானவர். அவருடன் எனக்கு நல்ல நட்பு உள்ளது. அவரது இழப்பு, பத்திரிகை துறைக்கு பெரிய இழப்பு. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
13-செப்-202013:54:50 IST Report Abuse
Bhaskaran சுட்டாச்சு சுட்டாச்சு நூல் மிக நன்றாக இருக்கும் .தான் திருவல்லிக்கேணியில் இளம் வயதில் தன பாட்டியுடன் வாழ்ந்த காலத்தில் நடந்த அரசியல் சம்பவங்களை கோர்வையாக சொல்லியுள்ளார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X