பொது செய்தி

தமிழ்நாடு

ஆன்லைனில் 'மாஸ்டர்' படம்!

Added : செப் 12, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

சென்னை:சூர்யாவை தொடர்ந்து, நடிகர் விஜயின் மாஸ்டர் படமும், ஆன்லைனில் வெளியாகிறது.

ஊரடங்கால் மூடப்பட்ட தியேட்டர்கள், மீண்டும் எப்போது திறக்கப்படும் என்று தெரியவில்லை. அப்படியே திறந்தாலும், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் எப்படி இருக்கும் என்பதும், இன்னும் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில், தியேட்டர்களை திறந்தால் விளம்பரத்தில் பங்கு; டிஜிட்டல் ஒளிபரப்பு கட்டணத்தை ஏற்பதில்லை என்ற நிபந்தனைகளை, தயாரிப்பாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள், தியேட்டர்கள் உரிமையாளர்களிடம் விதித்து உள்ளனர்.

அதனால், திறப்புக்கான தேதியை அறிவித்தாலும், தியேட்டர் செயல்பாட்டுக்கு வருமா என்பதில், சந்தேகம் நீடிக்கிறது.இந்நிலையில், நடிகர்சூர்யாவின் சூரரைப்போற்று படம் அடுத்தமாத துவக்கத்தில், ஆன்லைனில் வெளியாகிறது. அதைப்பின்பற்றி, விஜய் நடித்த மாஸ்டர் படமும், ஆன்லைனில் வெளியாகலாம் என, தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கு முன், தியேட்டரில் தான் படத்தை வெளியிடுவோம் என, மாஸ்டர் படக்குழு அறிவித்தது. தற்போதைய சூழலில், ஆன்லைனையும் தவறவிட்டால், மாஸ்டர் படத்திற்கான மதிப்பு குறைவதுடன், அதே மாதிரி கதை ஏதாவது, ஆன்லைனில் வெளியாகும் அபாயமும் உள்ளது. மேலும், காலம் கடத்தினால், மாஸ்டர் படத்தை, தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை என, தமிழ் திரையுலகினர் கூறுவதால், மாஸ்டர் படத்தை, ஆன்லைனில் வெளியிடும் அறிவிப்பை, எப்போது வேண்டுமானாலும் எதிர்பார்க்கலாம்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R S BALA - Tiruvallur,இந்தியா
13-செப்-202021:07:47 IST Report Abuse
R S BALA பெரிய நடிகர்களின் படங்களை நம்பி திரையுலகில் பலரது பிழைப்பு உள்ளது .. இப்படி பல கோடி செலவில் எடுத்த படங்கள் ஆன்லைனில் வெளிவருவது எந்த அளவிற்கு வசூலை தரும் என தெரியவில்லை ,புதிய வரவான இயக்குனருக்கும் இது சோதனை காலம்தான் ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X