கொரோனா மருத்துவமனையை காணோம்! | Dinamalar

சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

'கொரோனா' மருத்துவமனையை காணோம்!

Updated : செப் 13, 2020 | Added : செப் 12, 2020 | கருத்துகள் (1)
Share
   டீ கடை பெஞ்ச்

''அரசியல், 'சென்டிமென்ட்' பார்க்கறா ஓய்...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார், குப்பண்ணா.

''யாரு, என்னன்னு சொல்லுங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''தி.மு.க.,வில் துணைப் பொதுச் செயலராக, தாழ்த்தப்பட்டோருக்கான பிரிவுல, ஆ.ராஜா நியமிக்கப்பட்டார்... ஏற்கனவே, இந்த பதவியில சுந்தரம், பரிதி இளம்வழுதி, வி.பி.துரைசாமி ஆகியோர் இருந்தா... இந்த பதவிக்கு வந்ததுக்கு அப்புறம், அவாளோட செல்வாக்கு குறைஞ்சுடுத்து ஓய்...

''சுந்தரம், இப்போ இருக்கற இடமே தெரியலை... பரிதி இளம்வழுதி, அ.தி.மு.க.,வுக்கு போய், இறந்தும் விட்டார்... வி.பி.துரைசாமி, தனக்கு மரியாதையே இல்லைன்னு, பா.ஜ.,வுக்கு போயிட்டார் ஓய்...

''அரசியல் சென்டிமென்ட் படி, ஆ.ராஜாவுக்கும் செல்வாக்கு குறையுமோன்னு, அவரோட ஆதரவாளர்கள் பயப்படறா ஓய்...

''முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ், தாழ்த்தப்பட்டோர் கோட்டா அடிப்படையில, தி.மு.க., துணைப் பொதுச் செயலராக இருக்குறார்... அதனால, ஆ.ராஜா பொதுப் பிரிவுல தான், பதவிக்கு வந்தார்ன்னு சொல்லி, மனசை தேத்திக்கறா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.

''துப்புரவு பெண்களிடம், அத்துமீறுறவங்க மேல கடும் நடவடிக்கை எடுக்கணும் பா...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார், அன்வர்பாய்.

''என்ன விஷயம் வே...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.

''திருச்சி, மணப்பாறை அரசு மருத்துவமனையில, 20க்கும் மேற்பட்ட பெண்கள், தனியார் நிறுவன ஒப்பந்தம் மூலம், துப்புரவு தொழிலாளர்களாக வேலை பார்க்குறாங்க...

''அங்க மேற்பார்வையாளரா இருந்தவரும், அவருக்கு கீழே வேலை பார்த்த ரெண்டு பேரும் சேர்ந்து, அந்த பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துருக்காங்க பா...

''பாதிக்கப்பட்ட பெண்கள், பலமுறை புகார் அளிச்ச பின், மேற்பார்வையாளரை மட்டும், பணிநீக்கம் செஞ்சுட்டாங்க... மற்ற ரெண்டு பேர் மேலயும், எந்த நடவடிக்கையும் இல்லையாம் பா...

''தப்பு செஞ்ச எல்லாரையும் தண்டிக்கணுமுன்னு, அந்த பெண்கள், முதல்வரின் தனிப்பிரிவு, சுகாதாரத் துறை செயலர், அமைச்சர் ஆகியோருக்கு, புகார் அனுப்பியிருக்காங்க பா...'' என
முடித்தார், அன்வர்பாய்.

''என் தெருவுல இருந்த கவின், விவேகானந்தன், சுந்தர்ராஜன்னு மூணு பசங்க, தேவையில்லாம வெளியே சுத்திக்கிட்டு திரிஞ்சாவ... இப்போ அவங்களுக்கு, 'கொரோனா' வந்துருச்சு வே...'' என்றார், அண்ணாச்சி.

''இருக்கு, ஆனா இல்லைங்க...'' என, கடைசி தகவலுக்கு மாறினார், அந்தோணிசாமி.

''என்ன காமெடி பண்றீர் ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.

''சென்னை துறைமுகத்துல இருக்குற மருத்துவமனையில, கொரோனாவுக்கு வைத்தியம் பார்க்க, 8 கோடி ரூபாய் ஒதுக்கி, மருந்து, மருத்துவ உபகரணம், பாதுகாப்பு கவசம் எல்லாம் வாங்கினாங்க... நாலஞ்சு மாசமாகியும், அங்க யாருக்கும் மருத்துவம் பார்க்கலைங்க...

''இப்போ சத்தமே இல்லாம, அந்த கொரோனா வார்டையே மூடிட்டாங்க... அங்கே இருந்த, மருத்துவ உபகரணங்களும் காணாமல் போயிடுச்சாம்... இந்த விஷயத்தை
மூடி மறைக்க பார்க்குறாங்க...

''இதனால பிரச்னையில சிக்கக் கூடாதுன்னு, முதன்மை மருத்துவரா இருந்தவரு, இன்னும் இரண்டு ஆண்டு, 'சர்வீஸ்' இருக்குறப்பவே, விருப்ப ஓய்வு வாங்கிட்டாராமுங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.

''ராஜா ரவிவர்மா பத்தின வரலாறு புத்தகம் இருந்தா, நாளைக்கு யாராவது எடுத்துண்டு வாங்கோ...'' என்றார், குப்பண்ணா. நண்பர்கள், சரி என, தலையசைத்த படியே
நடையைக் கட்டினர்.


தந்தை, மகனை பார்த்து கலங்கும் தி.மு.க.,வினர்!''எஸ்.பி., அதிரடியால ஆடிப் போயிருக்காவல்லா...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் அண்ணாச்சி.

''எந்த ஊருலங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''வேலுார் மாவட்டத்துக்கு புது எஸ்.பி.,யா வந்திருக்கிற, செல்வகுமாரை தான் சொல்லுதேன்... தனக்கு வாழ்த்து சொல்ல வந்த அதிகாரிகளிடம், 'உங்க கடமையை சரியா செய்றது தான், எனக்கு செய்ற பெரிய மரியாதை'ன்னு சொல்லி, பூங்கொத்தை கூட வாங்காம திருப்பி அனுப்பிட்டாரு வே...

''அதே மாதிரி, தினமும் காலை, 7:00 மணிக்கு, 'வாக்கி டாக்கி'யில, ஒரு திருக்குறளை வாசித்து, அதற்கான விளக்கமும் தெரிவிக்க உத்தரவு போட்டிருக்காரு... பிறந்தநாள் கொண்டாடுற போலீசாருக்கு, வாக்கி டாக்கியில வாழ்த்து தெரிவிக்கிறதோட, அன்னைக்கு அவங்களுக்கு லீவும் குடுத்துடுதாரு வே...

''எல்லாத்துக்கும் மேலா, குற்றவாளிகளுடன் தொடர்புல இருக்கிற போலீசாருக்கு ஒரு வாரம் கெடு குடுத்து, திருந்த வாய்ப்பு குடுக்காரு... அப்படியும் திருந்தலைன்னா, அவங்களை லஞ்ச ஒழிப்புத் துறைக்கு மாற்ற, பரிந்துரை பண்ணிடுதாரு... இதனால, நைட்டு, 'மட்டை'யாயிட்டு, காலைல, 8:00 மணி வரை துாங்கும் மாமூல் வாழ்க்கையில ஊறிப் போன போலீசார், கலக்கத்துல இருக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.

''மதுரைக்காரங்க எதையும் மதிக்க மாட்டேங்கிறாங்க...'' என, அடுத்த தகவலுக்கு நகர்ந்தார் அந்தோணிசாமி.

''என்ன விஷயம் பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.

''மதுரையில, ஆளுங்கட்சியினர் அடிக்கடி பல நிகழ்ச்சிகளை நடத்துறாங்க... இதுல, யாரும் முக கவசம் அணியுறது இல்லை... சமூக இடைவெளியை கடைப்பிடிக்க மாட்டேங்கிறாங்க...

''அட, கொரோனாவால பாதிக்கப்பட்டு, மீண்டு வந்த கூட்டுறவு அமைச்சர் ராஜு கூட அசால்டா தான் இருக்காருங்க... இவங்க கூட்டணியில இருக்கிற, பா.ஜ.,வினரும் இப்படி தான் இருக்காங்க...

''சமீபத்துல, சோழவந்தான்ல நடந்த விவசாயிகள் சேவை மையம் துவக்க விழாவுல, எந்த நிர்வாகியும் முக கவசம் அணியலை... கூட்டமா நின்னு போஸ் குடுத்துட்டு இருந்தாங்க... 'கொரோனா பத்தி, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய இவங்களே இப்படி செய்யலாமா'ன்னு அதிகாரிகள் புலம்புறாங்க...'' என்றார், அந்தோணிசாமி.

''தோப்பனார் வந்துட்டார்... பின்னாடியே புள்ளையாண்டானும் வந்துடுவாரோன்னு பயப்படறா ஓய்...'' என, கடைசி தகவலுக்கு வந்தார் குப்பண்ணா.

''யாருங்க அவங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''ஈரோடு தி.மு.க.,வுல ஒரு காலத்துல அசைக்க முடியாத சக்தியா இருந்தவங்க, என்.கே.கே.பெரியசாமி, அவரது மகன் ராஜா... ராஜா, அமைச்சர், மாவட்டச் செயலர் பதவிகள்ல இருந்தார் ஓய்...

''பல சர்ச்சைகள்ல சிக்கி, பதவிகளை இழந்து, அப்பாவும், பிள்ளையும் ஒதுங்கிட்டா... சமீபத்துல, 'வீடியோ கான்பரன்ஸ்'ல நடந்த பொதுக்குழுவுல, ஸ்டாலின் உத்தரவுப்படி, பெரியசாமி கலந்துண்டு பேசினார் ஓய்...

''அப்ப, 'புது பொதுச் செயலர் துரைமுருகனும், நானும் பச்சையப்பா காலேஜ்ல படிக்கறச்சயே பிரெண்ட்ஸ்'னு பேசினார்... துரைமுருகன் விருப்பப்படி தான், பண்ணை வீட்டுல ஓய்வுல இருந்த பெரியசாமியை அழைச்சிண்டு வந்து பேச வச்சிருக்கா ஓய்...

''இதுல, பெரியசாமி ரொம்பவே உற்சாகமாகிட்டார்... ஆனா, இவர் பின்னாடியே, அதிரடிக்கு பேர் பெற்ற, அவரோட மகன் ராஜாவும் வந்துடுவாரோன்னு, ஈரோடு கட்சி நிர்வாகிகள் பீதியில இருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.அனைவரும் கிளம்ப, பெஞ்ச் மவுனமானது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X