செப்., 13, 1975
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தாலுகா, முடிகொண்டான் கிராமத்தில், 1897 அக்., 15ல் பிறந்தவர், வெங்கடராமர். கர்நாடக இசையை முறையாக பயின்றவர், தன், 17வது வயதில், முதல் இசைக் கச்சேரியை, கடலுாரில் நடத்தினார். கடந்த, 1950ல், அகில இந்திய வானொலியில், அவரது கச்சேரி தவறாமல் இடம் பெற்றது. தமிழகம் மட்டுமின்றி, திருப்பதி, காக்கிநாடா, விசாகப்பட்டினம், மும்பை, டில்லி ஆகிய நகரங்களிலும் கச்சேரிகள் நடத்தியுள்ளார்.அவருக்கு தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், ஆங்கிலம் என, பல மொழிகள் தெரியும். அத்துடன் ஜோசியம், ஆயுர்வேதம் தெரிந்தவர். சென்னை இசைக் கல்லுாரியின் தலைவராக, 1956ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். 'சங்கீத கலாநிதி, சங்கீத நாடக அகாடமி, சங்கீத கலாசிகாமணி' உட்பட, ஏராளமான விருதுகளை பெற்றவர். 1975 செப்., 13ல், தன், 78வது வயதில்
காலமானார். கர்நாடக இசைக் கலைஞர், முடிகொண்டான் வெங்கடராமர், காற்றில் கலந்த தினம் இன்று!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE