சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : செப் 12, 2020
Share
Advertisement

கல்பனாவுக்கு கவுரவம்

சர்வதேச விண்வெளி மையத்துக்கு தேவையான உபகரணங்களை ஏற்றிச்செல்லும் அமெரிக்காவின் சரக்கு விண்கலத்துக்கு, அமெரிக்கா வாழ் இந்தியரும் நாசா வீராங்கனையுமான மறைந்த கல்பனா சாவ்லாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. நார்த்ரோப் க்ரூமான் என்ற தனியார் விண்வெளி நிறுவனம் 'சைக்னஸ் கேப்சூல்' என்ற விண்கலத்துக்கு இவரது பெயரை சூட்டி கவுரவித்துள்ளது. 2003ல் அமெரிக்காவின் கொலம்பியா விண்கலம் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து பூமிக்கு திரும்பும் போது வெடித்து சிதறியது. இதில் கல்பனா சாவ்லா உள்பட ஏழு வீரர்கள் உயிரிழந்தனர்.

தகவல் சுரங்கம்

இரண்டாவது நீளமான சுவர்

ராஜஸ்தானின் ராஜமந்த் மாவட்டத்தில் உள்ள கும்பல் கார்ஹ் கோட்டை, 15ம் நுாற்றாண்டில் ரானா கும்பா என்ற மன்னரால் கட்டப்பட்டது. இது யுனெஸ்கோ உலக பாரம்பரிய பண்பாட்டு சின்னங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இந்த கோட்டையின் மதில் சுவர் 38 கி.மீ., துாரம் நீளமானது. உலகின் நீளமான சுவர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தை இந்த கும்பல்கார்ஹ் கோட்டை சுவர் பெற்றுள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 3600 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோட்டைக்குள் 360 கோயில்கள் உள்ளன. இது இந்தியாவின் சுற்றுலாத்தலங்களில் முக்கியமானது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X