சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஒரே நாளில் 88 ஆயிரம் பரிசோதனை 5,495 பேருக்கு தொற்று உறுதி

Added : செப் 12, 2020
Share
Advertisement

சென்னை:கொரோனா தொற்றை கண்டறிய, ஒரே நாளில், 88 ஆயிரம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில், 5,495 பேருக்கு தொற்று உறுதியானது.

இது குறித்து, சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:மாநிலத்தில் உள்ள, 167 கொரோனா பரிசோதனை ஆய்வகங்களில், நேற்று, 88 ஆயிரத்து, 562 மாதிரிகள் பரிசோதிக்கப் பட்டு உள்ளன; அவற்றில், 5,495 பேருக்கு தொற்று உறுதியானது.அதில், சென்னையில், 978; கோவையில், 428; திருவள்ளூரில், 299; சேலத்தில், 289; செங்கல்பட்டில், 267; திருப்பூரில், 256; கடலுாரில், 253 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை, 58.03 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு, நான்கு லட்சத்து, 97 ஆயிரத்து, 66 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. அதிகபட்சமாக சென்னையில், ஒரு லட்சத்து, 47 ஆயிரத்து, 591; செங்கல்பட்டில், 30 ஆயிரத்து, 65; திருவள்ளூரில், 28 ஆயிரத்து, 25 ; கோவையில், 21 ஆயிரத்து, 665 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.கொரோனா சிகிச்சை பெற்றவர்களில், நேற்று, 6,227 பேர் குணமடைந்துள்ளனர். இவர்களுடன் சேர்த்து, நான்கு லட்சத்து, 41 ஆயிரத்து, 649 பேர் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிஉள்ளனர்.

தற்போது, 47 ஆயிரத்து, 110 பேர் சிகிச்சையில் உள்ளனர்.சில தினங்களில் இறந்தவர்களில், 76 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களையும் சேர்த்து இதுவரை, 8,307 பேர் இறந்துள்ளனர்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரம்

மாவட்டம் பாதிப்பு குணம் அடைந்தோர் இறப்பு

அரியலுார் 3,260 2,962 37

செங்கல்பட்டு 30,065 27,583 475

சென்னை 1,47,591 1,33,987 2,959

கோவை 21,665 17,754 349

கடலுார் 16,023 12,717 170

தர்மபுரி 1,987 1,293 19

திண்டுக்கல் 7,796 6,856 149

ஈரோடு 4,409 3,347 56

கள்ளக்குறிச்சி 7,761 6,772 87

காஞ்சிபுரம் 19,235 17,718 287

கன்னியாகுமரி 10,847 9,896 206

கரூர் 2,127 1,705 31

கிருஷ்ணகிரி 3,107 2,255 44

மதுரை 15,238 13,959 371

நாகை 3,919 2,775 67

நாமக்கல் 3,210 2,332 50

நீலகிரி 2,279 1,753 17

பெரம்பலுார் 1,521 1,405 19

புதுக்கோட்டை 7,293 6,399 118

ராமநாதபுரம் 5,165 4,751 113

ராணிப்பேட்டை 11,952 11,159 143

சேலம் 14,180 12,042 218

சிவகங்கை 4,475 4,140 114

தென்காசி 6,224 5,502 116

தஞ்சாவூர் 8,192 7,249 128

தேனி 13,685 12,747 157

திருப்பத்துார் 3,631 3,073 73

திருவள்ளூர் 28,025 25,574 470

திருவண்ணாமலை 12,878 11,118 192

திருவாரூர் 5,123 4,308 64

துாத்துக்குடி 12,251 11,438 119

திருநெல்வேலி 11,017 9,724 193

திருப்பூர் 4,446 2,833 84

திருச்சி 8,753 7,722 132

வேலுார் 12,543 11,280 192

விழுப்புரம் 9,312 8,342 85

விருதுநகர் 13,647 13,928 202

வெளிநாட்டில் இருந்து வந்தோர் 922 905 1

உள்நாட்டு விமான பயணியர் 884 820 0

ரயிலில் பயணியர் 428 426 0
மொத்தம் 4,97,066 4,41,649 8,307

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X