பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயிகள் நிதியுதவி திட்டம் நிறுத்தமா?

Added : செப் 12, 2020
Share
Advertisement

சென்னை:'விவசாயிகள் நிதியுதவி திட்டம் நிறுத்தப்படவில்லை; விவசாயிகள் பதிவு தொடர்ந்து நடந்து வருகிறது' என, வேளாண்துறை அறிவித்துள்ளது.

வேளாண்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:பிரதம மந்திரியின் கிசான் நிதி உதவி திட்டத்தின் கீழ், ஏப்., 1 முதல், கொரோனா தொற்று காலத்தில், தகுதியற்ற நபர்கள் பதிவு செய்து, நிதியுதவி பெறுகின்றனர் என்று அறிந்ததும், விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.வட்டார மற்றும் மாவட்ட அளவில், தகுதியற்ற நபர்களை கண்டறிந்து, அவர்களின் வங்கி கணக்கில், அரசுக்கு சேர வேண்டிய தொகையை பிடித்தம் செய்து, மீண்டும் மத்திய அரசின் கணக்கில் செலுத்த, முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தவறு செய்தவர்கள் குறித்து, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து, உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும், PM-KISAN என்ற இணையதளத்தில், விவசாயிகள் நேரடியாக பதிவு செய்யும் முறையில், தொடர்ந்து விவசாயிகள் பதிவு செய்து வருகின்றனர்.இந்த விபரங்களை, வேளாண்மை மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் வழியாக, கள ஆய்வு செய்து, மாவட்ட கலெக்டர்கள் பரிந்துரை அடிப்படையில், மாநில அளவில் அனுமதி அளிக்க, உரிய நெறிமுறைகள் வகுக்கப்பட்டு வருகின்றன.

விவசாயிகள் அல்லாதவர்கள், இந்த திட்டத்தில் பயன்பெறுவதை தடுக்கவே, அரசு இம் முறைகளை வகுத்து வருகிறது. ஏற்கனவே, இந்த திட்டத்தில் பயன்பெற்று வரும், தகுதியான விவசாயிகளுக்கு, அடுத்த தவணைக்கான நிதியுதவி, தொடர்ந்து வழங்கப்படும்.விவசாயிகள் நிதியுதவி திட்டம், தற்காலிகமாக நிறுத்தப்படவில்லை; தொடர்ந்து விவசாயிகள் பதிவு நடந்து வருகிறது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X