எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

முதல்வர் நடத்திய ரகசிய 'சர்வே' : அ.தி.மு.க., பிரமுகர்கள் கலக்கம்

Updated : செப் 13, 2020 | Added : செப் 13, 2020 | கருத்துகள் (16)
Share
Advertisement
 முதல்வர் நடத்திய ரகசிய  'சர்வே'  : அ.தி.மு.க., பிரமுகர்கள் கலக்கம்

அ.தி.மு.க.,அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட செயலர்கள் ஆகியோரின், 'தில்லுமுல்லு'கள் குறித்த விபரங்களை, உளவுத்துறை போலீசார் வாயிலாக, ரகசியமாக முதல்வர் சேகரித்திருப்பது, அ.தி.மு.க., பிரமுகர்களிடம் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

சட்டசபை தேர்தலுக்கு, அ.தி.மு.க., தயாராகி வருகிறது. அமைச்சர்கள்,எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட செயலர்கள் போன்றோர், சட்டசபை தேர்தலில், தங்களுக்கு, 'சீட்' உறுதி என்ற நம்பிக்கையில் உள்ளனர்.ஆனால், கட்சி தலைமை, வெற்றி வாய்ப்பு உள்ளோருக்கு மட்டும், சீட் வழங்க முடிவு செய்துள்ளது. இதற்காக உளவுத் துறையினர் வாயிலாக, ரகசிய, 'சர்வே' நடத்தி உள்ளனர்.
அந்தந்த மாவட்ட உளவுத்துறை போலீசார் விசாரித்தால், தவறுகள் ஏற்படலாம் என்பதால், ஒவ்வொரு மாவட்டத்திற்கும், வேறு மாவட்ட உளவுப் பிரிவு போலீசார் அனுப்பி வைக்கப்பட்டனர்.
அவர்கள் வாயிலாக, அ.தி.மு.க., அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட செயலர்கள் குறித்த விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
பல மாவட்ட செயலர்கள், கட்சியினருக்கு கட்சிப் பதவி வழங்க, பணம் வசூலித்த விபரம் தெரியவந்துள்ளது. சட்டத்திற்கு புறம்பாக, யாரெல்லாம் என்ன தொழில் செய்கின்றனர்; யாரெல்லாம் மாமூல் வசூலிக்கின்றனர் என்பது உட்பட அனைத்து விபரங்களையும், போலீசார் சேகரித்துள்ளனர்.

விரைவில், இந்த அறிக்கையை, முதல்வரிடம் அளிக்க உள்ளனர். அறிக்கை அடிப்படையில், அதிக குற்றச்சாட்டுக்கு உள்ளானோர் மீது, முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என, எதிர்பார்க்கப்படுகிறது.மேலும், பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்கள், மக்கள் செல்வாக்கு இல்லாதவர்களுக்கு, தேர்தலில் சீட் வழங்காமல் இருக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த விபரம் அறிந்த கட்சி பிரமுகர்கள், கலக்கத்தில் உள்ளனர்.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.P. Barucha - Pune,இந்தியா
15-செப்-202013:56:37 IST Report Abuse
S.P. Barucha சட்டத்திற்கு புறம்பாக, யாரெல்லாம் என்ன தொழில் செய்கின்றனர் யாரெல்லாம் மாமூல் வசூலிக்கின்றனர் என்பது உட்பட அனைத்து விபரங்களையும், போலீசார் சேகரித்துள்ளனர். சட்டம் என்ன செய்யமுடியும்?
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
14-செப்-202019:47:32 IST Report Abuse
S. Narayanan ரஜினி ஆட்சிக்கு வரவேண்டும்.
Rate this:
Cancel
raghu - nellai,இந்தியா
14-செப்-202017:30:24 IST Report Abuse
raghu திரைமறைவில் என்ன நடந்தது என்று யாருக்கு தெரியும்.. ஓன்று மட்டும் புரிகிறது மீடியா நினைத்தால் யாரையும் எங்கேயும் கொண்டு செல்லலாம் என்று..... பொய்பரப்புரைகளுக்கு வாழ்த்துக்கள் எல்லாருக்கும் ..... திறமை இருப்பவனை யார் கொண்டும் தோற்கடிக்க முடியாது ....... சூரியனை கைகளால் மறைப்பது கடினம் ( திமுகவை சொல்லவில்லை சூரியன் என்று )
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X