பொது செய்தி

இந்தியா

வழக்குகள் அதிகம் தேக்கம்:தலைமை நீதிபதி பாப்டே கவலை

Updated : செப் 13, 2020 | Added : செப் 13, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 வழக்குகள் அதிகம் தேக்கம்
 தலைமை நீதிபதி பாப்டே கவலை

புதுடில்லி : ''கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, நீதிமன்றங்களில் வழக்குகள் அதிக அளவில் தேங்கியுள்ளன. எனவே, வழக்குகளுக்கு சமரச தீர்வு காணும் முயற்சிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்,'' என, தலைமை நீதிபதி, எஸ்.ஏ.பாப்டே பேசினார்.



உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்ற, ஆர்.பானுமதி எழுதிய, 'நீதித்துறை, நீதிபதிகள் மற்றும் நீதி நிர்வாகம்' என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா, டில்லியில் நேற்று நடந்தது. இதில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, எஸ்.ஏ.பாப்டே பேசியதாவது:

கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக முக்கியமான வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்படுகின்றன. இதனால், நாடு முழுதும் உள்ள நீதிமன்றங்களில் அளவுக்கு அதிகமான வழக்குகள் தேங்கி விட்டன.

கொரோனா பிரச்னை முடிந்ததும், இந்த வழக்குகளுக்கு எல்லாம் வழக்கமான நடைமுறைப்படி தீர்வு காண முடியுமா என தெரியவில்லை. எனவே, சமரச தீர்வு வாயிலாக இந்த வழக்குகளுக்கு தீர்வு காண முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
natarajan s - chennai,இந்தியா
13-செப்-202008:26:39 IST Report Abuse
natarajan s இது ஒவ்வொரு நீதிபதியும் பதவி ஏற்கும் போதும் அல்லது ஓய்வு பெரும் போதும் கவலைப்படுவது தான், ஆனால் அதை குறைக்க என்ன நடைமுறை என்பதை பற்றி இவர்கள் சொல்லமாட்டார்கள். சொன்னால் BOYCOTT நடைபெறும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X