சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திறப்பு விழா காணும் முன் உருக்குலையும் பைபாஸ் ரோடு

Added : செப் 13, 2020
Share
Advertisement

ஒட்டன்சத்திரம் : திறப்பு விழா காணும் முன்பே, ஒட்டன்சத்திரம் புதிய பைபாஸ் ரோட்டில் பள்ளம் உருவாகி விட்டது. உடனே சரிசெய்யாவிடில் விரிசலாகி விபத்து நிகழ வாய்ப்பு ஏற்படும்.

மத்திய தரை வழி போக்குவரத்துத் துறை மூலம் ஒட்டன்சத்திரத்தில் ரூ.205 கோடி மதிப்பில் திண்டுக்கல் ரோட்டில் லெக்கையன் கோட்டையில் இருந்து பழநி ரோட்டை இணைக்கும் வகையில் 10.1 கி.மீ., துாரத்திற்கு பைபாஸ் ரோடு அமைக்கப்பட்டு உள்ளது.இரண்டு ரயில்வே உட்பட 4 மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. நான்கு வழிச்சாலையாக உள்ள இந்த ரோடுக்கு திறப்பு விழா நடத்தும் முன்பே, வாகன போக்குவரத்து துவங்கிவிட்டது.

அதற்குள் தாராபுரம் செல்லும் சர்வீஸ் ரோட்டில் பல இடங்களில் பள்ளங்கள் தோன்றி ஜல்லிக்கற்கள் வெளியே தெரிகின்றன. ஒரு மழைக்கே தாக்குப் பிடிக்காத அளவுக்கு ரோட்டின் தரம் உள்ளது. கோடிக்கணக்கில் செலவு செய்து அமைக்கப்பட்ட பைபாஸ் ரோடு சில நாட்களிலேயே சேதமடைந்துள்ளது. வேடசந்துார் ரோட்டில் இருந்து திண்டுக்கல் செல்ல மேம்பாலத்தின் வலது பக்கம் சர்வீஸ் ரோடு போடப்பட்டுள்ளது. ஆனால் இந்த ரோட்டில் சென்றால் பைபாஸ் ரோட்டின் இடது பக்கம் செல்ல வழியில்லை. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த குழப்பமடைகின்றனர்.

விழுதுகள் அமைப்பைச் சேர்ந்த வஞ்சிமுத்து: ரோடு தரமாக அமைக்கப்படாததால் ஒரு மழைக்கே தாக்குப்பிடிக்க முடியவில்லை. பைபாஸ் ரோட்டில் உள்ள பல ஊர்களின் பெயர்கள் தவறாக எழுதப்பட்டு போர்டு வைக்கப்பட்டுள்ளது. போர்டுகளும் தெளிவாக இல்லை. கண்துடைப்பாக பணிகள் நடந்துள்ளது. வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X