சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கருவேலம் காடாக மாறியது அழகாபுரி குடகனாறு அணை

Added : செப் 13, 2020
Share
Advertisement

வேடசந்துார் : அழகாபுரி குடகனாறு அணையில் கருவேலம் மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளதால் அணை புதர்காடாக காட்சியளிக்கிறது.

வேடசந்துார் அருகே அழகாபுரியில் குடகனாற்றின் குறுக்கே ஐந்து ஷட்டர்களுடன் குடகனாறு அணை அமைக்கப்பட்டுள்ளது. 1977 ல் ஏற்பட்ட வெள்ளத்தில் உடைந்தததால் பெரும் உயிர், பொருள் சேதம் ஏற்பட்டது. பிறகு கூடுதலாக 10 ஷட்டர்கள் வைத்து புதுப்பிக்கப்பட்டது.இரண்டு கிளை வாய்க்கால்கள் மூலம் 9 ஆயிரம் ஏக்கர் நீர் பாசனம் பெறுகிறது. தற்போது இந்த அணைக்கு நீர் வரத்து இல்லை. அணைப்பகுதி முழுவதும் கருவேலம் மரங்கள் மண்டிக் கிடக்கிறது. அணைப் பகுதிக்குள் யாரும் செல்ல முடியாது.

அவற்றை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும், ஆற்றுப் பகுதி முழுவதும் அம்மரங்கள் சூழ காட்சி தருகிறது.அவற்றை அகற்றினால்தான் தண்ணீர் வந்தாலும் மக்கள் பயன்படுத்த முடியும். எனவே பொதுப்பணித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X