சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வெள்ளி நீர்வீழ்ச்சியில் போக்குவரத்து நெரிசல்

Added : செப் 13, 2020
Share
Advertisement

கொடைக்கானல் : கொடைக்கானலில் வெள்ளி நீர்வீழ்ச்சி சோதனை சாவடியில் குவியும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

சுற்றுலா பயணிகள் அனைவரும் கட்டாயம் இ பாஸ் மூலமே கொடைக்கானல் நகருக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் தனி வாகனங்கள் மூலம் வருகின்றனர். இவர்களை வெள்ளி நீர்வீழ்ச்சி சாதனை சாவடியில் தணிக்கை செய்வதற்கு தாமதம் ஏற்படுகிறது.இதனால் டைகர் சோலை -- வெள்ளி நீர்வீழ்ச்சி இடையே ஏராளமான வாகனங்கள் அணிவகுப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பஸ் மற்றும் இதர வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருந்து நகருக்குள் செல்கின்றன.

சுகாதாரம் மற்றும் நகராட்சி நிர்வாகம் கூடுதல் அதிகாரிகளை நியமிக்கும் பட்சத்தில் நெரிசல் தவிர்க்கப்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X