பொது செய்தி

தமிழ்நாடு

விளையாட்டு மைதானம் வரும் பொதுமக்கள் விவரமும் சேகரிப்பு

Added : செப் 13, 2020
Share
Advertisement

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் விளையாட்டு மைதானம் வந்து செல்லும் வீரர்கள் மட்டுமின்றி பொதுமக்களின் விவரங்களும் சேகரிக்கப்படுகிறது.

ஊரடங்கு தளர்வில் கட்டுப்பாடுகளுடன் உடற்பயிற்சி, விளையாட்டு பயிற்சி மேற்கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது. பயிற்சி பெற வரும் தேசிய, மாநில, மாவட்ட வீரர்களின் விவரங்களை பெற்று அவர்களை அனுமதிக்க விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி, தினமும் பயிற்சி மேற்கொள்ள வரும் வீரர்களின் உடல்வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு அனுமதிக்கப்படுகின்றனர்.குழுப் போட்டிக்கு பயிற்சி பெறுவோர் சமூக இடைவெளியை பின்பற்றி பயிற்சி பெற வேண்டும்.

ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் அளித்துள்ள நிலையில், நடைப்பயிற்சி, உடற்பயிற்சிக்காக பொதுமக்களும் விளையாட்டு மைதானங்களுக்கு வருகின்றனர்.அவர்களின் உடல் வெப்பநிலையை பரிசோதித்தும், முழு விவரங்களையும் பெற்ற பின் அனுமதிக்கப்படுகின்றனர். 10 வயதிற்குள் மற்றும் 50 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு மைதானம், உள் விளையாட்டு அரங்கில் அனுமதி கிடையாது என விளையாட்டு அலுவலர் ரோஸ் பாத்திமாமேரி தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X