சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., பிரமுகர் உட்பட 5 பேர் கைது

Added : செப் 13, 2020
Share
Advertisement

வடமதுரை : வடமதுரை அருகே லாட்டரி சீட்டு விற்ற தி.மு.க., பிரமுகர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

கொம்பேறிபட்டி, அய்யலுார், தங்கம்மாபட்டி பகுதிகளில் அரசின் தடையை மீறி அதிகளவில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட போலீசாருக்கு புகார் சென்றது. இதனையடுத்து வடமதுரை போலீசார் சோதனை நடத்தினர்.இதில் மணப்பாறை பாத்திமா நகர் முத்துக்குமார் 35, கொம்பேறிபட்டி ராஜரத்தினம் 60, மம்மானியூர் வெள்ளைச்சாமி 45, பாலத்தோட்டம் நாகராஜ் 46, ஆண்டிவேல் 24 ஆகிய 5 பேர் சிக்கினர்.

இவர்களை கைது செய்த போலீசார் பணம் ரூ.3200, ரூ.5300 மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள், மொபட்டை பறிமுதல் செய்தனர். இவர்களுள் தி.மு.க., பிரமுகரான ராஜரத்தினம் சில நாட்களுக்கு முன்னரும் லாட்டரி சீட்டு விற்ற புகாரில் கைதானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X