சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோட்டைக்குளத்தில் படகு குழாம் அமையுமா

Added : செப் 13, 2020
Share
Advertisement

திண்டுக்கல் : திண்டுக்கல் கோட்டை குளத்தில் படகு குழாம் அமைக்கும் திட்டம் செயல்படுத்தமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

திண்டுக்கல்லில் மலைக்கோட்டை, சிறுமலை, கொடைக்கானல், பழநியை தவிர சுற்றுலாவுக்கு வேறு இடம் இல்லை. தடியன்குடிசை, தாண்டிக்குடி, நத்தம் அய்யனார் அருவியில் சுற்றுலாவை மேம்படுத்தும் திட்டம் கிடப்பில் உள்ளது.மாநகராட்சி சார்பில் நகரில் சுற்றுலாவை மேம்படுத்த திட்டமிட்டனர். மலைக்கோட்டையை சுற்றி பார்க்க வருவோரை கவர கோட்டைக் குளத்தில் படகு குழாம் அமைக்க முடிவு செய்தனர். இதற்காக 2016 ல் ரூ.20 லட்சத்தில் இக்குளம் துார்வாரப்பட்டு, படகுகள் நிறுத்த மேடைகள் அமைக்கப்பட்டன.இங்கு தனியார் மூலம் படகு சவாரிக்கும் ஏற்பாடும் செய்தனர்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கோட்டை குளத்தில் கால்மிதி படகுகள் விடப்பட்டு சோதனை ஓட்டமும் நடந்தது. படகு குழாம் அமைக்க அரசு அனுமதி மறுத்துவிட்டது. அதன்பின் 4 ஆண்டுகளாக கோட்டைக் குளத்தில் எந்த முயற்சியையும் மாநகராட்சி எடுக்கவில்லை. தற்போது இத்திட்டம் செயல்படுத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது. தி.மு.க., முன்னாள் கவுன்சிலர் விஜயகுமார்: நகரில் பூங்காவை விட்டால் வேறு பொழுது போக்கிற்கு இடம் இல்லை. மலைக்கோட்டையை சுற்றிப் பார்க்க வெளிநாடுகள், மாநிலங்களில் இருந்தும் பலர் வருகின்றனர். கோட்டைக் குளத்தில் படகு குழாம் அமைத்தால் நல்லது. கிடப்பில் உள்ள திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X