கேரள அமைச்சரின் ராஜினாமா கோரி நடந்த போராட்டத்தில் வன்முறை

Added : செப் 13, 2020
Share
Advertisement

திருவனந்தபுரம்:கேரள தங்கக் கடத்தல் வழக்கில் கைதாகி சிறையில் உள்ள குற்றவாளிகளுடன், அம்மாநில உயர் கல்வித் துறை அமைச்சர், கே.டி.ஜலீலுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில், அமலாக்கத் துறையினர் நடத்திய விசாரணையை அடுத்து, அமைச்சர் பதவி விலகக் கோரி, கேரளா முழுதும், எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டத்தில், நேற்று வன்முறை வெடித்தது.

கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.மேற்காசிய நாடான, ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் இருந்து இங்கு, திருவனந்தபுரத்தில் உள்ள துாதரகத்தின் பெயரில், கடந்த சில மாதங்களுக்கு முன் வந்த பார்சலில், தங்கக் கட்டிகள் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.


விசாரணை

இது தொடர்பாக, துாதரக முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ், சரித் குமார் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இந்த வழக்கை, என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வுத் துறை, சுங்கத் துறை மற்றும் அமலாக்கத் துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் அனுமதி பெறாமல், கேரள உயர் கல்வித் துறை அமைச்சரான ஜலீல், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துாதரகத்தின் பெயரில், முஸ்லிம்களின் புனித நுாலான குரானை இறக்குமதி செய்ததும், அதை, தன் தொகுதி மக்களுக்கு வினியோகம் செய்ததும் தெரிய வந்தது.

அரசு நெறிமுறை சட்டத்தின் படி, மாநில அமைச்சர்களோ, அரசு அதிகாரிகளோ ஒரு நாட்டின் துாதரகத்துடன் நேரடியாக தொடர்பு கொள்ளக்கூடாது.மேலும், குரான் வந்த தாகக் கூறப்படும் பார்சல்களில், குரான் தவிர, தங்கமோ அல்லது வெளிநாட்டுப் பணமோ கடத்தி வரப்பட்டு இருக்க லாம் என்ற சந்தேகமும், விசாரணை அமைப்புகளுக்கு ஏற்பட்டது.

இந்நிலையில், கொச்சி யிலுள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராகுமாறு, அமைச்சர் ஜலீலுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டது. இதையடுத்து, அவர் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம், மூன்று மணி நேரத்திற்கும் மேல் விசாரணை நடந்ததாக கூறப்படுகிறது.


தடியடி

அமைச்சரின் பதில்கள், அமலாக்கத் துறைக்கு திருப்தியளிக்கவில்லை என்றும், அவரிடம் மீண்டும் விசாரணை நடத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது.அமலாக்கத் துறை விசாரணை நடத்தியதைத் தொடர்ந்து, அமைச்சர்ஜலீல் பதவி விலகக் கோரி, கேரளாவில், காங்., - பா.ஜ., முஸ்லிம் லீக் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்,நேற்று போராட்டத்தில் ஈடுபட்டன.

இந்தப் போராட்டங்களால், பல இடங்களில் வன்முறைச் சம்பவங்கள்அரங்கேறின. தடியடி மற்றும் கல் வீச்சில், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.இதற்கிடையே, ''அமைச்சர் ஜலீலிடம் விளக்கம் கேட்கப்பட்டு இருப்பதாகவும், அவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய அவசியம் இல்லை,'' என,சுற்றுலாத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X