பொது செய்தி

தமிழ்நாடு

வடமதுரையில் எகிறும் முட்டை விலை

Added : செப் 13, 2020
Share
Advertisement

வடமதுரை : வடமதுரையில் கடந்த 20 நாட்களில் முட்டை விலை ரூ.4ல் இருந்து ரூ.5.50 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் பிரச்னையால் சில மாதங்களாக முட்டை விலை குறைந்திருந்தது. தற்போது திடீரென அதிகரித்து வருகிறது. இருபது நாட்களுக்கு முன் சில்லரை விற்பனையில் ஒரு முட்டை ரூ.4 என இருந்தது. தற்போது ரூ.5.50 ஆக உயர்ந்துள்ளது.வியாபாரி என்.ராமர் கூறியதாவது: அரசு சார்பில் மாணவர்களுக்கு இலவசமாக வினியோகிக்க அறிவுறுத்தியபின் விலை உயர துவங்கியது. உற்பத்தி குறைந்து தேவை அதிகரிப்பால் பண்ணைகளில் முட்டைக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது.

நேற்றைய நிலவரப்படி நாமக்கல்லில் கொள்முதல் விலை முட்டைக்கு ரூ.4.90 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விலை உயர்வு, சில்லரை பிரச்னையால் இரு நாட்களாகவே முட்டை ஒன்று ரூ.5.50 என விற்கிறது. புரட்டாசி துவங்கினால் விலை குறையும்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X