பொது செய்தி

இந்தியா

வழக்குகள் அதிகம் தேக்கம்: தலைமை நீதிபதி பாப்டே கவலை

Updated : செப் 14, 2020 | Added : செப் 13, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
 வழக்குகள் அதிகம் தேக்கம்   தலைமை நீதிபதி பாப்டே கவலை

புதுடில்லி : ''கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, நீதிமன்றங்களில் வழக்குகள் அதிக அளவில் தேங்கியுள்ளன. எனவே, வழக்குகளுக்கு சமரச தீர்வு காணும் முயற்சிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்,'' என, தலைமை நீதிபதி, எஸ்.ஏ.பாப்டே பேசினார்.



உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்ற, ஆர்.பானுமதி எழுதிய, 'நீதித்துறை, நீதிபதிகள் மற்றும் நீதி நிர்வாகம்' என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா, டில்லியில் நேற்று நடந்தது. இதில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, எஸ்.ஏ.பாப்டே பேசியதாவது:

கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக முக்கியமான வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்படுகின்றன. இதனால், நாடு முழுதும் உள்ள நீதிமன்றங்களில் அளவுக்கு அதிகமான வழக்குகள் தேங்கி விட்டன.

கொரோனா பிரச்னை முடிந்ததும், இந்த வழக்குகளுக்கு எல்லாம் வழக்கமான நடைமுறைப்படி தீர்வு காண முடியுமா என தெரியவில்லை. எனவே, சமரச தீர்வு வாயிலாக இந்த வழக்குகளுக்கு தீர்வு காண முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தங்கை ராஜா - tcmtnland,இந்தியா
13-செப்-202022:12:25 IST Report Abuse
தங்கை ராஜா ஐயா இதில் ஆர்எஸ்எஸ் பிடியில் இருந்து வெளியே வாருங்கள் இந்த பிரச்சனைகள் எல்லாம் விரைவில் தீர்ந்து போகும் இந்தியாவில் நீதியும் நிலைக்கும்
Rate this:
Cancel
Nagarajan D - Coimbatore,இந்தியா
13-செப்-202017:24:57 IST Report Abuse
Nagarajan D மரியாதைக்குரிய நீதிபதி அவர்களே... அதனால் மட்டுமே வழக்குகள் தேக்கமடைய வில்லை நீங்கள் தரும் எண்ணற்ற வாய்தாக்களும் அர்த்தமற்ற ஜாமீன்களும் ஒரு காரணம் நீதிபதி அவர்களே... அந்த காரைக்குடி ஜாமீன் செட்டியாருக்கு எதற்கு ஜாமீன் கொடுக்கப்பட்டது... என்ன காரணத்திற்க்காக ஜாமீன் கேட்டான் அந்த திருடன்? உடல் நலமில்லை என கெஞ்சி ஜாமீன் வாங்கினான்... ஆனால் அவன் தற்போது உடல் நலமில்லாதவன் மாதிரியா இருக்கிறான்?
Rate this:
Cancel
Baskar - Paris,பிரான்ஸ்
13-செப்-202014:59:17 IST Report Abuse
Baskar பிரசாந்திபூஷண் வழக்கை எவ்வளவு வேகமாக முடிக்க முடியும் அவ்வளவு விரைவில் முடித்தீர்கள்.அதில் இருந்த வேகம் என் பெரும் பணக்காரர்கள் விஷயத்தில் முடியவில்லை. நீங்கள் ஒரு தலைமை நீதி உங்கள் சொல் ஈடுபடாதா. இந்தியாவில் ஒவ்வொரு கேசும் பாத்து வருடங்களுக்கு இழுத்து கொண்டு செல்வது உங்களுக்கு புரியவில்லையா. தற்போது முக்கிய வழக்குளில் உள்ளவர்கள் பெரும் அரசியல்வாதிகள். அவர்களை உங்களால் ஒன்றும் செய்ய முடியாது. இன்னும் நூறு வருடங்கள் ஆனாலும் இந்த வழக்குகள் வாய்தா வாங்கி கொண்டு தான் இருக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X