பொது செய்தி

தமிழ்நாடு

கேரளாவிற்கு திரும்பும் வட மாநில தொழிலாளர்கள்

Added : செப் 13, 2020
Share
Advertisement

கூடலுார்:கொரோனா பரவலால், சொந்த ஊர் திரும்பிய வட மாநில தொழிலாளர்கள், ஆறு மாதங்களுக்கு பின், மீண்டும் கேரளா திரும்புகின்றனர்.

கேரளாவில் கட்டுமான பணி, வியாபார நிறுவனங்களில், வட மாநில தொழிலாளர்கள் அதிகம் வேலை பார்த்தனர். கொரோனா ஊரடங்கால், பணிகள் முடங்கியதால், மார்ச்சில் சொந்த மாநிலத்திற்கு சென்றனர்.தற்போது, கேரளாவில் இயல்பு நிலை திரும்பியதால், மீண்டும் பணியாற்ற, வட மாநில தொழிலாளர்கள் வரத் துவங்கியுள்ளனர்.

மேலும், குஜராத், மத்திய பிரசேதம் உள்ளிட்ட வட மாநிலங்களில் இருந்து, தொழிலாளர்களை தனியார் நிறுவனங்கள், பஸ்களில் அழைத்து வருகின்றன. இவர்கள், 'இ - பாஸ்' பெற்று பரிசோதனைக்கு உட்படுத்தி, குமுளி வழியாக கேரளா செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X