சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குடும்பத்துடன் விஷம் குடித்த ஆட்டோ டிரைவர் சாவு

Added : செப் 13, 2020
Share
Advertisement

நாகர்கோவில்:குடும்பத்துடன் விஷம் குடித்த ஆட்டோ டிரைவர் பலியானார். அவரது மனைவி, மகள் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

குமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி அருகே, பெருமாள்புரத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் மணிகண்டன், 41. குடும்பத்துடன், அஞ்சு கிராமம் அருகே ஸ்ரீலட்சுமிபுரத்தில் வாடகை வீட்டில் வசித்தார்.கடந்த, 10ம் தேதி இரவு, மனைவி ஈஸ்வரி, 38, மகள் ரவீனா, 1௪, ஆகிய மூவரும் விஷம் குடித்து மயங்கினர். ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில், மணிகண்டன் இறந்தார்.ஈஸ்வரி, ரவீனா ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மணிகண்டனுக்கு கடன் வழங்கியவர்கள், நெருக்கடி கொடுத்ததால், குடும்பத்துடன் விஷம் குடித்தது விசாரணையில் தெரிந்தது. அஞ்சுகிராமம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X