அரசியல் செய்தி

தமிழ்நாடு

'மீண்டும் வேண்டும் எடப்பாடி' போஸ்டர்களால் கரூரில் பரபரப்பு

Added : செப் 13, 2020
Share
Advertisement

கரூர்:'மீண்டும் எடப்பாடி; வேண்டும் எடப்பாடி' என, கரூர் நகரில் பல இடங்களில், போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்தாண்டு, ஏப்ரல் அல்லது மே மாதம் நடக்க உள்ளது. அ.தி.மு.க., சார்பில், முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.கடந்த மாதம், துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள், அடுத்த முதல்வர் பன்னீர் செல்வம் தான் என, தேனி மாவட்டங்களில் போஸ்டர் ஒட்டினர். இது, அ.தி.மு.க.,வில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், நேதாஜி சுபாஷ் சேனை என்ற அமைப்பு சார்பில், 'மீண்டும் எடப்பாடி; வேண்டும் எடப்பாடி' என, முதல்வர், இ.பி.எஸ்., செயல்படுத்திய பல்வேறு நலத்திட்டங்களை பட்டியலிட்டு, கரூர் நகரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், முன்னாள் முதல்வர்கள், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, துணை முதல்வர் பன்னீர் செல்வம், பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆகியோரின் படங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த போஸ்டர், அ.தி.மு.க., வட்டாரத்தில், மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X