சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'எம்மொழியும் கற்பேன்டா':பா.ஜ.,வின் பதிலடி 'டி-ஷ-ர்ட்'

Added : செப் 13, 2020 | கருத்துகள் (21)
Share
Advertisement
'எம்மொழியும் கற்பேன்டா'  :பா.ஜ.,வின் பதிலடி 'டி - ஷ-ர்ட்'


திருப்பூர்,: தி.மு.க.,வுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், 'எம்மொழியும் கற்பேன்டா' வாசகம் பொறித்த 'டி - ஷர்ட்'களை திருப்பூர், பா.ஜ.,வினர் களமிறக்கி உள்ளனர்.

ஹிந்தி எதிர்ப்பு விவகாரத்தை கையில் எடுத்துள்ள, தி.மு.க.,வினர், திருப்பூர் ஆடை உற்பத்தி நிறுவனத்தினரிடம் இருந்து, 'ஹிந்தி தெரியாது போடா' என்ற வாசகம் பொறித்த டி - ஷர்ட்களை தயாரித்து, அணிந்து வருகின்றனர்.
தி.மு.க.,வுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், திருப்பூர் மாவட்ட, பா.ஜ.,வினர், மும்மொழி ஆதரவு டி - ஷர்ட்களை களமிறக்கியுள்ளனர்.'தமிழாய்ந்த தமிழன்டா; எம்மொழியும் கற்பேன்டா; தடுக்க நீ யாரடா' என்ற வாசகம் பொறித்த டி - ஷர்ட் தயாரித்து, அணிந்து வருகின்றனர். சமூக வலைதளங்களிலும், இதை பரப்பி வருகின்றனர்.
பா.ஜ., ஊடகப் பிரிவு, திருப்பூர் மாவட்ட தலைவர் நரேன்பாபு கூறுகையில், ''மும்மொழி எதிர்ப்பாளர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், முதல் கட்டமாக, 1,000 டி - ஷர்ட் ஆர்டர் கொடுத்து, உள்ளூர் பிரமுகர்களுக்கு வழங்கியுள்ளோம்.''வரும், 17ல், பிரதமர் மோடி பிறந்தநாள். அன்று அணிவதற்கு, பல்வேறு மாவட்டங்களில் உள்ள கட்சியினர், எங்களை தொடர்பு கொண்டு, டி - ஷர்ட் கேட்கின்றனர்; அதிகளவு ஆர்டர் வழங்கஉள்ளோம்,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெகுளி - Maatuthaavani,இந்தியா
15-செப்-202005:29:04 IST Report Abuse
வெகுளி ஹிந்தி கற்க விடுடா... கடப்பா கல்ல திருப்பி குடுடா....
Rate this:
Cancel
Jayvee - chennai,இந்தியா
14-செப்-202010:28:07 IST Report Abuse
Jayvee தம்பி டாக்டர் ஜோசப்.. பாரதியார் என்ன உன்ன மாதிரி அரிசிக்கு விலை போன ஐட்டம்னு நினைச்சியா..? அவர் ஹிந்து.. இந்தியாவை விரும்பிய தமிழர்..
Rate this:
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
14-செப்-202008:54:47 IST Report Abuse
VENKATASUBRAMANIAN முன்பு போல் இப்போது திமுக அரசியல் செய்ய முடியாது. உடனே பதிலடி கொடுக்க தயாராகிவிட்டார்கள். காசு உள்ளவர்கள் ஹிந்தி படிக்கலாம் ஆனால் அரசு பள்ளியில் படிக்கும் ஏழை மாணவன் இலவசமாக படிக்கக்கூடாது. இதுதான் திமுக அதிமுக போன்ற தமிழக கட்சிகளின் நிலை. ஏன் இவர்கள் நடத்தும் cbsc பள்ளிகளை மூட மாட்டேங்குறார்கள். இவர்களின் பிள்ளைகளை ஏன் அரசு பள்ளியில் படிக்க வைக்க வில்லை. இவர்களுக்கு ஒரு நியாயம் மற்றவர்களுக்கு ஒரு நியாயமா. இதற்கு பிரியாணிக்கும் 200கும் quarter கும் அலைபவர்கள்தான் support செய்வார்கள். திமுக அதிமுகவுக்கும் இதுதான் வேண்டும். பொய் பெயரில் ஒளிந்து கொண்டு பதிவு செய்பவர்கள் திருந்துங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X