தென்பெண்ணையில் ரசாயன நுரையால் துர்நாற்றம்

Added : செப் 13, 2020
Share
Advertisement

ஓசூர்:ஓசூர், கெலவரப்பள்ளி அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில், வெளியேற்றப் பட்ட நீரில், மலை போல் ரசாயன நுரை தேங்கி, துர்நாற்றம் வீசியது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், கெலவரப்பள்ளி அணை நீர்பிடிப்பு பகுதியில், இம்மாத துவக்கத்தில் இருந்தே, அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.அணையின் மொத்த உயரமான, 44.28 அடியில், 40.67 அடிக்கு, நீர் இருப்பு இருந்தது. நேற்று முன்தினம், அதிகபட்சமாக வினாடிக்கு, 960 கன அடி நீர்வரத்து இருந்தது.

அணையில் போதிய நீர் இருப்பு இருந்ததால், வரத்தான, 960 கன அடி நீரும் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால், ஆற்றில் ரசாயன நுரை தேங்கியது. நேற்றும் அணைக்கு, 960 கன அடி நீர்வரத்து இருந்தது. இந்த தண்ணீர் முழுதும், தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்பட்டது.

கர்நாடகா மாநிலத்தில் இருந்து வந்த நீரில், அதிகளவு ரசாயனம் கலந்திருந்தது.இதனால், திறக்கப்பட்ட நீரில், கூடுதலாக ரசாயன நுரை ஏற்பட்டு, அணை மதகிற்கு எதிரே, தென்பெண்ணை ஆற்றில், மலை போல் ரசாயன நுரை தேங்கி துர்நாற்றம் வீசியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X