அரசியல் செய்தி

தமிழ்நாடு

'எம்மொழியும் கற்பேன்டா' பா.ஜ.,வின் பதிலடி 'டி - ஷ-ர்ட்'

Added : செப் 13, 2020
Share
Advertisement

திருப்பூர்:தி.மு.க.,வுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், 'எம்மொழியும் கற்பேன்டா' வாசகம் பொறித்த 'டி - ஷர்ட்'களை திருப்பூர், பா.ஜ.,வினர் களமிறக்கி உள்ளனர்.

ஹிந்தி எதிர்ப்பு விவகாரத்தை கையில் எடுத்துள்ள, தி.மு.க.,வினர், திருப்பூர் ஆடை உற்பத்தி நிறுவனத்தினரிடம் இருந்து, 'ஹிந்தி தெரியாது போடா' என்ற வாசகம் பொறித்த டி - ஷர்ட்களை தயாரித்து, அணிந்து வருகின்றனர். தி.மு.க.,வுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், திருப்பூர் மாவட்ட, பா.ஜ.,வினர், மும்மொழி ஆதரவு டி - ஷர்ட்களை களமிறக்கியுள்ளனர்.

'தமிழாய்ந்த தமிழன்டா; எம்மொழியும் கற்பேன்டா; தடுக்க நீ யாரடா' என்ற வாசகம் பொறித்த டி - ஷர்ட் தயாரித்து, அணிந்து வருகின்றனர். சமூக வலைதளங்களிலும், இதை பரப்பி வருகின்றனர்.

பா.ஜ., ஊடகப் பிரிவு, திருப்பூர் மாவட்ட தலைவர் நரேன்பாபு கூறுகையில், ''மும்மொழி எதிர்ப்பாளர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், முதல் கட்டமாக, 1,000 டி - ஷர்ட் ஆர்டர் கொடுத்து, உள்ளூர் பிரமுகர்களுக்கு வழங்கியுள்ளோம்.''வரும், 17ல், பிரதமர் மோடி பிறந்தநாள். அன்று அணிவதற்கு, பல்வேறு மாவட்டங்களில் உள்ள கட்சியினர், எங்களை தொடர்பு கொண்டு, டி - ஷர்ட் கேட்கின்றனர்; அதிகளவு ஆர்டர் வழங்கஉள்ளோம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X