ஆட்டோ ஓட்டிய மருத்துவர் மீண்டும் சுகாதார அதிகாரியாக நியமனம்!

Updated : செப் 13, 2020 | Added : செப் 13, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement

பெங்களூரு: கர்நாடகாவில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் துன்புறுத்தலால் ஆட்டோ ஓட்டுவதாக அறிவித்திருந்த மருத்துவருக்கு மீண்டும் அதிகாரி பதவி வழங்கப்பட்டுள்ளது.



latest tamil news



கர்நாடக மாநில சுகாதாரத் துறையில் மூத்த மருத்துவராக பணியாற்றி வந்தவர் ரவீந்திரநாத். 20 ஆண்டுகளுக்கு முன் அரசு மருத்துவராக பணியில் சேர்ந்தவருக்கு, 2018-ல் குழந்தைகள் நல அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்தார். அப்போது ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுடன் துறை ரீதியாக ஏற்பட்ட பிரச்னை காரணமாக, எந்த பதவியும் வழங்காமல், ஊதியத்தையும் நிறுத்தி வைத்திருந்தனர். தன்னை தண்டித்தது தவறு என கர்நாடக நிர்வாக தீர்ப்பாயத்தில் முறையிட்டு நிவாரணம் பெற்றார். ஆனாலும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அவரை பந்தாடியுள்ளனர்.


latest tamil news



ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் விதிகளுக்கு புறம்பாக நடந்து கொண்டு தன்னை பலிகடா ஆக்கியதாகவும், அதனால் 15 மாதங்களாக ஊதியம் நிறுத்தப்பட்டு வேறு வழியின்றி சொந்த ஊரில் ஆட்டோ ஓட்டுவதாகவும் சமீபத்தில் பேட்டியளித்தார். அவரது ஆட்டோவில் 'ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளால் துன்புறுத்தலுக்கு ஆளானவன்' என எழுதியிருந்தது ஊடகங்களில் பெரும் கவனம் பெற்றது. இந்நிலையில் இவ்விவகாரத்தில் தலையிட்டு மாநில சுகாதார அமைச்சர், அவரை மாவட்ட சுகாதார அதிகாரியாக நியமிக்க உத்தரவிட்டார். 2 ஆண்டு போராட்டத்திற்கு பின் மீண்டும் தனக்கு தகுதியான பதவியில் மருத்துவர் ரவீந்திரநாத் அமர்ந்துள்ளார்.


Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.sundaram - tirunelveli,இந்தியா
13-செப்-202017:44:54 IST Report Abuse
r.sundaram நிறுத்திய ஊதியத்தை அந்த ஐ ஏ எஸ் அதிகாரிகள் இவருக்கு கொடுக்க வழி செய்ய வேண்டும்.
Rate this:
Cancel
Rameeparithi - Bangalore,இந்தியா
13-செப்-202013:52:04 IST Report Abuse
Rameeparithi அரசியல் வியாதிகளை அழித்தால் எல்லா துறையும் முன்னேறும் ...
Rate this:
Cancel
Rajan - Alloliya,இந்தியா
13-செப்-202013:27:06 IST Report Abuse
Rajan நன்றி மினிஸ்டர்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X