சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மணல் கடத்திய மூவர் கைது 2 லாரி பறிமுதல்

Added : செப் 13, 2020
Share
Advertisement

விழுப்புரம்:மணல் கடத்திய மூவரை போலீசார் கைது செய்து, இரண்டு லாரிகள், ஒரு காரை பறிமுதல் செய்தனர்.

கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த பைத்தாம்பாடி தென்பெண்ணை ஆற்றில் இருந்து லாரிகளில் மணல் கடத்தி, வெளி மாவட்டங்களுக்கு கொண்டு செல்வதாக, விழுப்புரம், எஸ்.பி., ராதாகிருஷ்ணனுக்கு தகவல் கிடைத்தது.மணல் கடத்தல் தடுப்பு பிரிவு தனிப்படை போலீசார், விழுப்புரம் அடுத்த பிடாகம் பெட்ரோல் பங்க் அருகே, நேற்று வாகன சோதனை நடத்தினர்.

அப்போது, அந்த வழியாக மணல் ஏற்றி வந்த, மினி லாரியையும், பின் தொடர்ந்து வந்த மாருதி ஸ்விப்ட் காரையும் நிறுத்தினர். லாரியை நிறுத்திய டிரைவர், தப்பி ஓடி விட்டார்.காரில் இருந்த மூவரை பிடித்து விசாரித்தனர்.

அவர்கள், 26 -38 வயதுஉடையவர்கள் என்பதும், தென்பெண்ணை ஆற்றில் இருந்து மணல் கடத்தி வந்ததும் தெரிந்தது. மூவரையும் கைது செய்து, லாரி, காரை பறிமுதல் செய்தனர். தென்பெண்ணை ஆற்றில் இருந்து மணல் கடத்திச் சென்ற, மற்றொரு லாரியை பேரங்கியூரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X