அரசியல் செய்தி

தமிழ்நாடு

'பா.ஜ., இஸ்லாமியர்களுக்கு எதிரான கட்சி என்ற விஷத்தை விதைக்கும் எதிர்க்கட்சிகள்'ஏகத்துவ ஜமாஅத் மாநில தலைவர்

Added : செப் 13, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

மதுரை:பா.ஜ.,''முஸ்லிம்களுக்கு எதிரான கட்சி பா.ஜ., என்ற விஷத்தை, தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விதைக்கின்றன,'' என, மதுரையில் தமிழ்நாடு ஏகத்துவ ஜமாஅத் மாநில தலைவர் இப்ராகிம் கூறினார்.

கொரோனா காலத்தில், பிரதமர் மோடி அரசு கொண்டு வந்த மக்கள் நலத்திட்டங்களை விளக்கி, கன்னியாகுமரியில் பிரசாரயாத்திரை துவக்கிய இப்ராகிம், மதுரை வந்தார்.அவர் கூறியதாவது: பிரதமர் மோடியின் சாதனைகளை, காங்., - தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள், இழிவுபடுத்தி பொய் பிரசாரம் செய்து வருகின்றன.

தமிழகத்தில், திராவிட கட்சிகளுக்கு மாற்றாக தேசபக்தர்கள் ஒன்றிணைந்து, பா.ஜ., தலைமையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எழுச்சி ஏற்பட்டு உள்ளது.ஆனால் ஹிந்து, முஸ்லிம்களை பிரிக்கும் நோக்கத்தில், தி.மு.க., செயல்படுகிறது.

பிரதமர் மோடி, எந்த திட்டங்களையும், 135 கோடி மக்கள் நலனை மனதில் கொண்டு செயல்படுத்துகிறார். ஹிந்துக்களுக்காக செயல்படுத்தவில்லை.முஸ்லிம்களுக்கு, பா.ஜ., எதிரானது என்ற எதிர்க்கட்சிகளின் பொய் பிரசாரம் எடுபடாது. செப்., 30ல் இந்த யாத்திரை, சென்னையில் முடியும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
WEBWORLD - Periyakulam,இந்தியா
13-செப்-202012:51:56 IST Report Abuse
WEBWORLD நீ யாருப்பா, நீயா தலைவர், உன் கட்சிக்கு தொண்டர் யாரு
Rate this:
Cancel
natarajan s - chennai,இந்தியா
13-செப்-202008:24:00 IST Report Abuse
natarajan s தவறே இல்லை, இந்த பிஜேபி வந்த பிறகுதான் இவர்களது ஆட்டம் கொஞ்சமாவது அடங்கி இருக்கிறது.
Rate this:
Cancel
Baskar - Paris,பிரான்ஸ்
13-செப்-202002:53:33 IST Report Abuse
Baskar நன்றாக சொன்னிர்கள். கோரோனோ விஷயத்தில் பி.ஜெ.பி எ.டி.மக். எப்படி செயல் பட்டது என்று உலகத்துக்கே தெரியும் இருந்தாலும் அதிலும் அரசியல் செய்தனர் இந்த தி.மு.கவிஞர். உங்கள் மதத்தை சேர்ந்த சிலரும் தி.மு.க வுடன் கூட்டணி வைத்து பேசுகிறார்கள். முதலில் அவர்களை திருத்துங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X