சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இலங்கைக்கு கடத்த முயற்சி ரூ.10 லட்சம் மஞ்சள் பறிமுதல்

Added : செப் 13, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 இலங்கைக்கு கடத்த முயற்சி ரூ.10 லட்சம் மஞ்சள் பறிமுதல்

ராமேஸ்வரம்:இலங்கைக்கு கடத்த முயன்ற, 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 34 மஞ்சள் மூட்டைகளை மரைன் போலீசார் பறிமுதல் செய்து, மூவரை கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் மண்டபம் வேதாளை கடலோர சாலையில், நேற்று முன்தினம் இரவு, மரைன் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த லாரியை பிடித்தனர்.அதில், 34 மூட்டைகளில், 1,000 கிலோ மஞ்சள் இருந்தது. வேதாளையில் இருந்து கள்ளப்படகில், மஞ்சளை இலங்கை கடத்தி செல்ல திட்டமிட்டது தெரிந்தது.

லாரியில் இருந்த சகிபுல்லா, 38, அவரது தம்பி ரியாஸ், 36, லாரி டிரைவர் லோக வெங்கடேஷ், 40, கைது செய்யப்பட்டனர். 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மஞ்சள் மற்றும் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
13-செப்-202006:33:08 IST Report Abuse
NicoleThomson இலங்கையில் மஞ்சளுக்கு அவ்ளோ வால்யுவா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X