சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பணி நேரத்தில் ஆன்லைன் வகுப்பு: அலுவலர்கள் புலம்பல்

Added : செப் 13, 2020
Share
Advertisement

மதுரை : மதுரையில் அரசு பாலிடெக்னிக் சார்பில் பகுதி நேர டிப்ளமோ படிப்புகளுக்கு பகலில் ஆன்லைன் வகுப்புகள் நடப்பதால் கவனிக்க முடியவில்லை என பல்துறை அரசு அலுவலர்கள் புலம்புகின்றனர்

.பாலிடெக்னிக் சார்பில் எலக்ட்ரானிக்ஸ், சிவில், மெக்கானிக் உள்ளிட்ட மாலை நேர டிப்ளமோ படிப்புகள் நடக்கின்றன. மின்சாரம், பொதுப்பணித்துறை, சென்ட்ரல் எக்சைஸ் உட்பட மத்திய, மாநில அரசு துறை அலுவலகங்களின் பொறியியல் பிரிவு அலுவலர்கள் கூடுதல் தகுதி மற்றும் ஊக்கத்தொகைக்காக நுாற்றுக்கும் மேற்பட்டோர் டிப்ளமோ படிக்கின்றனர். கொரோனா காரணமாக நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டன.அலுவலர்கள் கூறுகையில், ''தற்போது ஆன்லைனில் மதியம் 3:00 -5:00 மணி வரை வகுப்பு நடக்கின்றன.

அந்த நேரம் அலுவலக பணியில் இருப்பதால் ஆன்லைன் வகுப்பை கவனிக்க முடியவில்லை. வருகை பதிவை உறுதி செய்ய அலைபேசியை 'ஆன்' செய்து மட்டுமே வைக்கிறோம். இதனால் நேரடி வகுப்புகள் நடந்த நேரத்தில்ஆன்லைன் வகுப்பும் நடத்த வேண்டும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X