சம்பவம் செய்தி

தமிழ்நாடு

புதிய தமிழகம் நிர்வாகி கொலை

Added : செப் 13, 2020
Share
Advertisement

ராஜபாளையம்:புதிய தமிழகம் கட்சியின் நிர்வாகி, வெட்டி கொலை செய்யப்பட்டார்.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே, முதுகுடியைச் சேர்ந்தவர் ராஜலிங்கம், ௫௨; புதிய தமிழகம் கட்சியின், விருதுநகர் மாவட்ட முன்னாள் செயலர்.ஜனவரியில் நடந்த தங்கவேலு என்பவரின் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட இவர், நேற்று காலை, தன் வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார். அப்போது, ஒரு கும்பல் அவரை வெட்டி கொலை செய்து, தப்பியது.

கொலையாளிகளை கைது செய்யக் கோரி, உறவினர்கள், ஊர் மக்கள், சங்கரன்கோவில் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். எஸ்.பி., பெருமாள், ஏ.டி.எஸ்.பி., மாரிராஜ், டி.ஆர்.ஓ., மங்கள ராமசுப்பிரமணியன் பேச்சு நடத்தினர்.இதில், உடன்பாடு ஏற்படாததால், இரவு, 8:00 மணியை தாண்டியும் மறியல் நீடித்தது. பதற்றம் காரணமாக, போலீசார் குவிக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X