சம்பவம் செய்தி

தமிழ்நாடு

செம்பட்டி அருகே 80 சவரன் கொள்ளை

Added : செப் 13, 2020
Share
Advertisement

திண்டுக்கல்:நலம் விசாரிக்க வந்தவர்களிடம், 80 சவரன் நகை, 1.57 லட்சம் பணத்தை கொள்ளை அடித்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம்,செம்பட்டி அருகே சேடப்பட்டியைச் சேர்ந்த காட்டுராஜா, 58, உடல்நலம் பாதிக்கப்பட்டார். நேற்று முன்தினம், உறவினர் ராஜம்மாள், அவரது கணவர் ராஜகுமாரன், தாய் பேச்சியம்மாள், தந்தை சுப்பையா ஆகியோர் நலம் விசாரிக்க சேடப்பட்டி வந்தனர்.

பக்கத்தில் காலியாக இருந்த வீட்டில் பேச்சியம்மாள், ராஜம்மாள் தங்கினர். மற்ற இருவரும் திண்டுக்கல் சென்றிருந்தனர்.பேச்சியம்மாள் கைப்பையில் இருந்த, 80 சவரன் நகை, 1.57 லட்சம் ரூபாய், ஒரு அலைபேசி ஆகியவற்றை, மர்ம நபர்கள் நள்ளிரவில் கொள்ளை அடித்து சென்றனர்.

செம்பட்டி போலீசார் கூறுகையில், 'கைப்பையில் பேச்சியம்மாள், ராஜம்மாள் நகைகளுடன், காட்டுராஜா மனைவி மகாலட்சுமியின், 40 சவரன் நகையையும் வைத்து உள்ளனர்.'கதவருகே இருந்த ஜன்னல் வழியாக, உட்புற தாழ்ப்பாளை திறந்த மர்ம நபர்கள், கொள்ளையை அரங்கேற்றியுள்ளனர். 10 பேரின் விரல் ரேகைகளை சேகரித்துள்ளோம். தொடர் விசாரணை நடக்கிறது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X