சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நெல் கொள்முதல் நிறுத்தத்தால் பாழாகும் பயிர்கள்

Added : செப் 13, 2020
Share
Advertisement

மேலுார் : வி.ஏ.ஓ.,க்கள் கள ஆய்வில் ஏக்கர் கணக்கை குறைத்து மதிப்பிட்டதால் நெல் கொள்முதல் செய்ய அதிகாரிகள் மறுக்கின்றனர்.

கொட்டகுடி, அரசப்பன்பட்டி ஊராட்சிகளில் 250 ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்ட இடங்களை வி.ஏ.ஓ.,க்கள் ஆய்வு செய்து கொடுத்த கணக்கீட்டின் அடிப்படையில் நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு 180 டன் நெல்கொள்முதல் செய்ய கலெக்டர் வினய் உத்தரவிட்டார். அதன்படி அரசப்பன்பட்டியில் ஆக.,20ல் கொள்முதல் நிலையம் துவங்கப்பட்டு செப்.,3ல்180 டன் கொள்முதல் செய்யப்பட்டது. இதன் பிறகு கொண்டு வரப்பட்ட நெல்லை வாங்க அதிகாரிகள் மறுக்கின்றனர்.விவசாயி பவானி: இரண்டு ஊராட்சிகளில் 200 ஏக்கருக்கு மேல் பயிரிட்ட நெல்லை, வி.ஏ.ஓ.,க்கள் 95 ஏக்கர் பயிரிட்டுள்ளதாக கணக்கு கொடுத்துள்ளனர்.

அதனால் நாலுகுளம், கொட்டகுடி பகுதியில் 50 ஏக்கருக்கு மேல் அறுவடை செய்ய வேண்டிய நெல்லை அதிகாரிகள் வாங்க மறுக்கின்றனர். மேலும் அறுவடை காலம் தவறி பயிர்கள் சாய்ந்ததில் விழுந்த நெல் மணிகளில் இருந்து நாற்றுகள் முளைத்துள்ளன. வங்கிகளில்கடன் வாங்கி விவசாயம் செய்த நிலையில் கடன் கட்ட முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகிறோம் என்றார்.திருவாதவூர் ஆர்.ஐ., மஞ்சு கூறுகையில், ''வி.ஏ.ஓ.,க்கள் தவறாக கணக்கீடு கொடுத்தது குறித்து விசாரிக்கப்படும்'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X