பொது செய்தி

தமிழ்நாடு

செய்திகள் சில வரிகளில்...

Added : செப் 13, 2020
Share
Advertisement

பெண் கொலைடி.கல்லுபட்டி: -டி.கல்லுபட்டி அருகே வி.அம்மாபட்டி தவிடன், -முத்துலட்சுமி மகள் ஜெயசக்திபாலா 18. இவருக்கும், விருதுநகர் மாவட்டம் மத்தியசேனை முத்துபாண்டிக்கும் கடந்த நவம்பரில் திருமணம் நடந்தது. ஜெயசக்திபாலாவிற்கு அப்போது 18 வயது முடியாததால் போலீசார் அறிவுரைபடி 3 மாதங்களாக தந்தை வீட்டில் வசித்தார். நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு வீட்டை விட்டு சென்றவர் திரும்பவில்லை. நேற்று காலை உடலில் 20 இடங்களில் வெட்டு காயத்துடன் கண்மாயில் இறந்து கிடந்தார். எஸ்.பி., சுஜீத்குமார். டி.எஸ்.பி., மதியழகன் விசாரித்தனர்.

தொழிலாளி கொலையா -திருமங்கலம்: திருமங்கலம் அருகே நெடுங்குளத்தை சேர்ந்தவர் முருகன் 35. மனைவி செல்வி, 2 குழந்தைகள் உள்ளனர். குடும்ப பிரச்னையில் மனைவியை பிரிந்து வாழ்ந்தார்.ஓராண்டாக கோவை கொண்டையம்பட்டி தனியார் நிறுவனத்தில்வேலை செய்தவர் நேற்று முன்தினம் இறந்தார். இறுதிசடங்கின்போது தலையின் பின்பகுதி, காது பகுதியில் ரத்தம் இருந்ததை உறவினர்கள் கண்டனர். இறப்பில் சந்தேகம் இருப்பதாக திருமங்கலம் தாலுகா போலீசில் புகார் செய்தனர்.முருகனின் பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தபோது அதற்கான வசதி இல்லை என நிர்வாகம் தெரிவித்ததால் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

குட்கா சப்ளையர் கைது மேலுார்: மேலுார் பஸ் ஸ்டாண்ட் பகுதி கடைகளுக்கு தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் சப்ளை செய்த தெற்குபட்டி முகமது சாஸ்தகீரை 42, இன்ஸ்பெக்டர் சார்லஸ் தலைமையில் எஸ்.ஐ., பாலகிருஷ்ணன் கைது செய்தார். நுாற்றுக்கும் மேற்பட்ட குட்கா பாக்கெட்டுகள், 25 போலி பீடி கட்டுகளை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X