சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'நீட்' ‍தேர்வு பயத்தில் மாணவி, மாணவர் தற்கொலை

Added : செப் 13, 2020
Share
Advertisement

மதுரை:'நீட்' தேர்வு பீதியில், மதுரை மாணவி, தர்மபுரி மாணவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

மதுரை ஆறாவது சிறப்பு பட்டாலியன்குடியிருப்பில் வசிப்பவர், போலீஸ் எஸ்.ஐ., முருக சுந்தரம். இவரது மகள் ஜோதி ஸ்ரீதுர்கா, 19. இவர் கடந்தாண்டு, 'நீட்' தேர்வு எழுதி குறைந்த மதிப்பெண் பெற்றதால், மருத்துவ படிப்பு கனவு நிறைவேறவில்லை.இம்முறையாவது வெற்றி பெற வேண்டும் எனக் கருதி, முழு நேரமாக தேர்வுக்கு தயாரானார்.

இன்று தேர்வு நடக்க உள்ள நிலையில், நேற்று அதிகாலை, 1:00 மணி வரை படிக்கப் போவதாக கூறி அறைக்குள் சென்றவர், அதிகாலை, 4:00 மணிக்கு துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.அவரது உடல், நேற்று மதியம் தத்தனேரியில் தகனம் செய்யப்பட்டது.

மாணவி தற்கொலையை தொடர்ந்து, 'நீட்' தேர்வை ரத்து செய்யக் கோரி, மதுரையில் பல்வேறு அமைப்பினர், கட்சியினர் அடுத்தடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கடிதம்

ஜோதி ஸ்ரீதுர்கா எழுதி வைத்திருந்த கடிதம்:நான் உண்மையில் நன்றாக படித்தேன். ஆனால், பயமாக இருக்கிறது. நான் நீட் தேர்வில்தோல்வி அடைந்துவிட்டால், அனைவரையும் அதிருப்திக்குள்ளாக்கி இருப்பேன். இது, யாருடையதவறும் இல்லை.என் மேல், நிறைய எதிர்பார்ப்புகளை வைத்திருந்தீர்கள்.

ஒருவேளை எனக்கு மெடிக்கல் சீட் கிடைக்கா விட்டால், உங்கள் கஷ்டமெல்லாம் வீணாகி இருக்கும். இவ்வாறு, குறிப்பிட்டு உள்ளார். அவர் பேசிய, 'ஆடியோ' வில், 'யார், யாரையும் குற்றம் சாட்டாதீங்க. யாருடைய தப்பும் இல்லை. என்ன தான் நான் படிச்சாலும் பயமா இருக்கு. பெயிலாகி விடுவேனோன்னு பயமா இருக்கு.'ஒருவேளை, 'சீட்' கிடைக்கலைன்னா நீங்க எல்லாரும் ஏமாந்திடுவீங்க. ஸாரி அப்பா, ஸாரி அம்மா. டாட்டா.

நீங்க சோகமா இருக்காதீங்க. தம்பி ஸ்ரீதர் இருக்கான். அவனோட எதிர்காலத்திற்காக நீங்க சோகமா இருக்கக்கூடாது. அவனை நல்லா படிக்க வையுங்க. பைடா ஸ்ரீதர். ஐம் ஸாரி. 'ஐ லவ் யூ. ஸாரி அப்பா. ப்ளீஸ்... உங்க ஹெல்த்தை நல்லா பார்த்துக்கோங்க. நீங்க ஹார்ட் பேஷன்ட். என்னை பற்றி ரொம்ப கவலைப்படாதீங்க. ஐம் ஸாரி' என பேசியுள்ளார்.


துாக்கு

தர்மபுரி மாவட்டம், இலக்கியம்பட்டி செவத்தான் கவுண்டர் தெருவில் வசிப்பவர், மணிவண்ணன்.சேலம் மாவட்டம், பூசாரிப்பட்டியைச் சேர்ந்த இவர், தர்மபுரியில் டிராக்டர் விற்பனை தொழில் செய்து வருகிறார்.இவரது மனைவி ஜெயசித்ரா. இவர்களது மகன் ஆதித்யா, 20. இவர், 'ஆன்லைன்' மூலம், 'நீட்' தேர்வு பயிற்சி பெற்று வந்தார்.

இன்று, சேலம், குகைப் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளி மையத்தில், 'நீட்' தேர்வு எழுத இருந்தார்.நேற்று காலை அவரது பெற்றோர், பூசாரிப்பட்டியில் உள்ள தங்களதுவிவசாய நிலத்துக்கு சென்றனர். மாலை, 6:30 மணிக்கு, அவர்கள் வீடு திரும்பியபோது, ஆதித்யா துாக்கில் சடலமாக தொங்கியதை கண்டு, அதிர்ச்சி அடைந்தனர்.தர்மபுரி டவுன் போலீசார் வழக்கு பதிந்து, 'நீட்' தேர்வு பீதியால், ஆதித்யா தற்கொலை செய்து கொண்டாரா என விசாரித்து வருகின்றனர்.

அமைச்சர் அஞ்சலி

முன்னதாக, அரசு மருத்துவமனையில் மாணவியின் உடலுக்கு, வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார் அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.நிருபர்களிடம் அமைச்சர் கூறியதாவது:

நீட் தேர்வு மட்டுமே எதிர்காலம் அல்ல. எதையும் தைரியமாக எதிர்கொண்டால் வெற்றி பெறலாம். மதுரை பார்வையற்ற மாணவி பூரண சுந்தரி, ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற்று, உலகப் பார்வையை தன்பால் இழுத்தார்.

மாணவர்கள் நம்பிக்கையுடன் இருந்தால் வெற்றி பெறலாம். நீட் தேர்வில் இருந்து, முழுமையாக விலக்கு வேண்டி, அரசு சார்பில், தொடர்ந்து உரிமை குரல் எழுப்பி வருகிறோம். நீட் தேர்வில் விலக்கு வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X