சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மதுரை கொரோனா டிஸ்சார்ஜ் 14 ஆயிரத்தை தொடுகிறது: திண்டுக்கல்லில் ஒரே நாளில் 135 பேர் குணம்

Added : செப் 13, 2020
Share
Advertisement

மதுரை:மதுரையில் கொரோனா டிஸ்சார்ஜ் 14 ஆயிரத்தை தொடுகிறது. திண்டுக்கல்லில் நேற்று ஒரேநாளில் 135 பேர் குணமடைந்தனர்.

மதுரை 109

மதுரை மாவட்டத்தில் நேற்று 109 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர். இதுவரை 13,959 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். புதிதாக 78 பேர் பாதிக்கப்பட்டனர். மொத்த பாதிப்பு 15,238 ஆக உயர்ந்தது. தற்போது 908 பேர் சிகிச்சையில் உள்ளனர். புதிதாக இறப்பு இல்லை. இதுவரை 371 பேர் பலியாகியுள்ளனர்.

திண்டுக்கல் 135

திண்டுக்கல்லில் நேற்று கொரோனாவில் இருந்து 135 பேர் குணமடைந்தனர். டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 6856 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 17 பெண்கள், 11 முதியவர்கள், 3 சிறுவர்கள் உட்பட 66 பேரும், மொத்தமாக 7796 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 791 பேர் சிகிச்சையில் உள்ளனர். நிலக்கோட்டை அருகே முத்துலாபுரம் பகுதி 43 வயது பெண் பலியானார்.

தேனி 86

தேனி மாவட்டத்தில் நேற்று 86 பேர் டிஸ்சார்ஜ்' ஆகினர். மொத்தம் 12,747 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். நேற்று புதிதாக 79 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 13,685 ஆக உயர்ந்தது. கிருஷ்ணகிரி வி.ஐ.பி., நகர் 33 வயது ஆண் கொரோனாவால் தேனி மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் பலியானார். பலி 224 ஆக அதிகரித்தது.

ராமநாதபுரம் 103

ராமநாதபுரம் மாவட்டத்தில்நேற்று 103 பேர் குணமடைந்தனர். புதிதாக 23 பேருக்கு கொரோனா உறுதியானது. இதுவரை 5169 பேர் பாதிக்கப்பட்டதில் 4778 பேர் குணமடைந்துள்ளனர்.பலி 112 ஆக உள்ளது. தற்போது 301 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சிவகங்கை 5

சிவகங்கையில் கொரோனா குணமாகி 5 பேர் நேற்று டிஸ்சார்ஜ் ஆகினர். புதிதாக நேற்று 32 பேர் பாதிக்கப்பட்டனர்.

விருதுநகர் 95

விருதுநகரில் 95 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர். 39 பேருக்கு கொரோனா உறுதியானது. பலி இல்லை. மொத்தம் 13,647 பேர் பாதிக்கப்பட்டதில் 13,028 பேர் குணமடைந்து 417 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.

திருநெல்வேலி 130

திருநெல்வேலியில் நேற்று 130 பேர் டிஸ்சார்ஜ் ஆன நிலையில் இதுவரை 9724 பேர் குணமாகி உள்ளனர். நேற்று 108 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 11,017 ஆனது. தற்போது 1100 பேர் சிகிச்சையில் உள்ளனர். தச்சநல்லுார் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., முருகன் நேற்று கொரோனாவுக்கு பலியானார். இதுவரை 193 பேர் இறந்துள்ளனர்.

தென்காசி 36

தென்காசியில் நேற்று 36 பேர் டிஸ்சார்ஜ் ஆனதால் மொத்தம் 5502 பேர் குணமடைந்தனர். நேற்று 81 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 6224ஆக உயர்ந்தது. தற்போது 606 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 3 பேர் பலியாயினர். இதுவரை 116 பேர் இறந்துள்ளனர்.

துாத்துக்குடி 99

துாத்துக்குடியில் நேற்று 99 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர். மொத்தம் 11,438 பேர் குணமாகியுள்ளனர். நேற்று 83பேருக்கு கொரோனா உறுதியானது. பாதிப்பு 12,251 ஆனது. தற்போது 694 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று ஒருவர் பலியானார். இதுவரை 119 பேர் இறந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X