சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'நீட மேலும் ஒரு மாணவர் தற்கொலை

Added : செப் 13, 2020
Share
Advertisement

திருச்செங்கோடு:'நீட்' தேர்வு எழுதவிருந்த நிலையில், திருச்செங்கோட்டை சேர்ந்த மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, இடையன் பரப்பை சேர்ந்த தம்பதி முருகேசன் - கோமதி. இவர்களது மகன் மோதிலால், 21.பிளஸ் 2 முடித்த மோதிலால், நீட் தேர்வுக்காக தயாராகி வந்தார். குமாரபாளையத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், இன்று தேர்வு எழுதவிருந்தார். இந்நிலையில் நேற்றிரவு, 9:30 மணிக்கு, வீட்டில் துாக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதனால், பெற்றோர் பலத்த அதிர்ச்சி அடைந்தனர்.

ஏற்கனவே இரண்டு முறை நீட் தேர்வு எழுதிய மோதிலால், தோல்வி அடைந்துள்ளார். மீண்டும் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற பயத்தில், தற்கொலை செய்திருக்கலாம் எனத் தெரிகிறது.திருச்செங்கோடு ரூரல் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X