பொது செய்தி

தமிழ்நாடு

உங்கள் திறமைக்கு சவால்

Added : செப் 13, 2020
Share
Advertisement

இந்தியாவின் 'நிதி ஆயோக்' 'அடல் இன்னோவேஷன் மிஷன்' இணைந்து 15 புதிய சவால்களை 'ஸ்டார்ட் அப்' கம்பெனிகளுக்கும் எம்.எஸ்.எம்.இ. கம்பெனிகளுக்கும் அறிவித்துள்ளன. ஒவ்வொரு சவாலிலும் வெற்றி பெறுபவர்களுக்கு 50 லட்சம் ரூபாய் வரை நிதியுதவி வழங்கப்படுகிறது.

இந்த சவால்கள் ஐந்து மத்திய அமைச்சரகங்களை உள்ளடக்கியிருக்கிறது.ஒவ்வொரு மத்திய அமைச்சரகத்திற்கும் மூன்று சவால் வீதம் வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொன்றில் இருந்தும் இரண்டு வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்படுவர். போட்டியில் பங்கேற்க குறிப்பிட்ட 15 பிரிவுகளில் முன்னதாகவே நல்ல முறையில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியை காண்பித்திருக்க வேண்டும் அல்லது அதற்கான 'புரோட்டோ டைப்' செய்திருக்க வேண்டிய அளவுக்கு வந்திருக்க வேண்டும்.

உங்களுக்கு இந்த பரிசு கிடைக்குமானால் அது மூன்று தவணையாக கொடுக்கப்படும்.இனி என்னென்ன அமைச்சரகங்கள் சம்பந்தப்பட்டுள்ளன; என்னென்ன சவால் என்று பார்ப்போம்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு சார்பில் உந்துவிசை புவியியல் தகவல் முறைமை ரோபாடிக்ஸ் பிரிவில் புதுமை புகுத்தி ஆராய்ச்சி செய்து அதில் வெற்றி கண்டிருந்தால் பங்கேற்கலாம். பாதுகாப்பு துறை சார்பில் ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸ் வாயிலாக முன்கணிப்பு செய்வது ஆட்டோ ஸ்டெபிலைசர் சிஸ்டத்தில் புதுமை தகவல் தொடர்பு துறையில் புதுமை புகுத்துவது (மோடம்) ஆகியவை அடங்கும்.

மத்திய உணவு பதப்படுத்துதல் துறையின் கீழ் வீணாகும் பொருட்களை எப்படி சேமிப்பது உணவு பொருட்கள் பேக்கேஜிங் துறையில் மாற்று வழி என்ன மற்றும் உணவு பதப்படுத்தும் துறையில் புதுமையான இயந்திரங்கள் கண்டுபிடிப்பு சார்ந்தாக இருக்கும்.சுகாதார மற்றும் குடும்ப நலத்துறையின் கீழ் டேட்டா அனலிட்டிக்ஸ் உபயோகித்து தொற்றுநோய் வரப்போவதை எப்படி முன் கூட்டியே அறிவது ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தை உபயோகித்து நுண்ணுயிர் எதிர்ப்புக்கான முறைகளை கண்டறிவது நோய் தடுப்பு மருந்துகளை பத்திரமாக கொண்டு செல்ல உதவும் குளிர்சாதன வசதிகளை நவீனபடுத்துவது எப்படி என்பது போன்ற தலைப்புகள் அடங்கும்.

வீட்டுவசதி மற்றும் நகர்புறநலன் சார்ந்த துறையின் கீழ் நீர் வினியோக முறையில் நீர் வீணாவதை தடுக்கும் வழிகள் நீர் திருட்டை தடுக்கும் வழிகளில் புதுமை புகுத்துதல் மாசு கட்டுப்பாடு தடுக்க 'ஸ்மார்ட் டெக்னாலஜி' பயன்படுத்துவது நகரங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க ஸ்மார்ட் டெக்னாலஜியை எப்படி உபயோகிப்பது போன்றவை இடம் பெற்றுள்ளன. விபரங்களுக்கு http://aimapp2.aim.gov.in/arise/ என்ற இணையதளத்தை பார்வையிட்டு விண்ணப்பிக்கலாம்.உங்கள் சந்தேங்களுக்கு எழுதுங்கள்: Sethuraman.sathappan@gmail.com. அலைபேசி: 9820451259
சேதுராமன் சாத்தப்பன்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X