அரசியல் செய்தி

தமிழ்நாடு

நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்

Added : செப் 13, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

சென்னை:இன்று நீட் தேர்வு நடைபெறவுள்ள நிலையில், மதுரை மாணவி ஜோதிகா ஸ்ரீதுர்கா தற்கொலை செய்து கொண்டதற்கு, கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தும், நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என, கூறி உள்ளனர்.

தி.மு.க., தலைவர் ஸ்டாலின்:

நீட் தேர்வு, மாணவ சமுதாயத்தின் மனங்களை நிலை குலைய வைப்பதாக இருப்பதை அனிதா முதல் ஜோதிஸ்ரீ துர்கா மரணம் வரை உணர முடிகிறது. மாணவி ஜோதிஸ்ரீதுர்கா பேசிய ஆடியோ, நீட் தேர்வில் கோர முகத்தை காட்டுகிறது

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்:

மாணவி ஜோதிஸ்ரீ துர்கா, தற்கொலையால், நீட் தேர்வுக்கு எதிராக மக்கள் புரட்சி வெடிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை. அதற்கு முன் தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்ய மத்திய அரசு முன் வர வேண்டும்.ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ: நீட் தேர்வு எத்தனை உயிர்களை பலி வாங்க போகிறதோ? நீட் தேர்வு ரத்து செய்தால் தான், மாணவ, மாணவிகளின் உயிர்பலியை தடுக்க முடியும்; சமூக நீதியையும் நிலை நாட்ட முடியும்.

த.மா.கா., தலைவர் வாசன்:

மாணவி ஜோதிஸ்ரீ துர்கா, நீட் தேர்வுக்கு தயாராகி கொண்டு இருந்த நேரத்தில் தாம் தோல்வியடைந்து விடுவோம் என்ற பயத்தில் மன உளச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டது மிகவும் வேதனை அளிக்கிறது.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
13-செப்-202013:47:21 IST Report Abuse
Bhaskaran கல்வி பற்றி தளபதி அறிக்கை கொடுக்கும் அளவுக்கு ஆனது நம் துரதிர்ஷ்டமே
Rate this:
Cancel
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
13-செப்-202010:19:14 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan கற்க வக்கற்றவர்கள் இப்படித்தான் அறிக்கை கொடுப்பார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X