அரசியல் செய்தி

தமிழ்நாடு

நீட் தேர்வை தைரியமாக எழுதுங்க: உதயநிதி அறிவுரை

Added : செப் 13, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement


அருப்புக்கோட்டை:''நீட் தேர்வை மாணவர்கள் தைரியமாக எழுதவேண்டும்,'' என தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி கூறினார்.

நீட் தேர்வு விவகாரத்தில் தற்கொலை செய்துகொண்ட மதுரை மாணவி ஜோதி ஸ்ரீதுர்காவின் சொந்த ஊர் அருப்புக்கோட்டை. அங்கு வந்த உதயநிதி, குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி ரூ. 5 லட்சம் வழங்கினார்.

அவர் கூறியதாவது:5 ஆண்டுகளாக நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி வருகிறோம். அனைவருக்கும் சம வாய்ப்பு இல்லை. ஏழை மாணவர்கள் மருத்துவராகும் கனவை தகர்க்க நீட் தேர்வை நடத்துகின்றனர். மறைந்த முதல்வர் ஜெ., கூட நீட் தேர்வை வேண்டாம் என்றார். இந்த ஆட்சி எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 2 நாட்களுக்கு முன் கூட அரியலுார் விக்னேஷ் தற்கொலை செய்து கொண்டார்.

மாணவர்கள் தைரியமாக இருக்க வேண்டும் என முதல்வர் கூறுகிறார். அ.தி.மு.க., நீட் தேர்விற்கு எதிர்ப்பு என்கின்றனர். ஆட்சியை கையில் வைத்து கொண்டு நீட் தேர்வை ரத்து செய்ய முடியவில்லை என்றால் எதற்கு இருக்கிறீர்கள். ஜல்லிகட்டிற்கு தமிழக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். மாணவர்கள் போராட்டத்தை நிறுத்த டெல்லிக்கு சென்று ஒரே நாளில் முடித்து வைத்த அரசு நீட் தேர்வு ரத்திற்கு ஏன் செய்யவில்லை. இது போன்று இனி நீட் தேர்வினால் உயிர் போக கூடாது. 8 மாதத்தில் நல்ல முடிவு கிடைக்கும். நீட் தேர்வை ரத்து செய்யும் வரை தி.மு.க., போராடும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Baskar - Paris,பிரான்ஸ்
13-செப்-202015:15:06 IST Report Abuse
Baskar ஊருக்கு உபதேசம் செய்யும் உத்தமன் உதயநிதியை என் நீ திருமணம் செய்த பெண்ணிடம் அப்போதே கேட்கவில்லை என் இந்தி படித்ததை என்று. உனக்கு படிப்பை ஒன்றுமே தெரியாது. நீ எல்லாம் மாணவர்களுக்கு அறிவுரை சொல்லுகிறாய். காலா கொடுமை.
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
13-செப்-202013:23:51 IST Report Abuse
Girija ஹி ஹி ஹி பத்து புள்ளைபெத்தவளுக்கு தலைச்சன் புள்ளைக்காரி தைர்யம் சொன்னாளாம், இரண்டு தலைமுறை தொடர்ந்து பூனை மேல் மதில் , வாயை பார் வாலாஜாபாத் வரை ..........................................
Rate this:
Cancel
13-செப்-202012:27:08 IST Report Abuse
ஆரூர் ரங் மனைவி பள்ளியில் இந்தி படித்தவர் . இன்றுவரை தமிழ் எழுத்துக்கூட்டித்தான் படிக்கத்தெரியுமாம்😥. ஊருக்கு உபதேசம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X