நீட் தேர்வை தைரியமாக எழுதுங்க: உதயநிதி அறிவுரை| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

நீட் தேர்வை தைரியமாக எழுதுங்க: உதயநிதி அறிவுரை

Added : செப் 13, 2020 | கருத்துகள் (5)
Share


அருப்புக்கோட்டை:''நீட் தேர்வை மாணவர்கள் தைரியமாக எழுதவேண்டும்,'' என தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி கூறினார்.

நீட் தேர்வு விவகாரத்தில் தற்கொலை செய்துகொண்ட மதுரை மாணவி ஜோதி ஸ்ரீதுர்காவின் சொந்த ஊர் அருப்புக்கோட்டை. அங்கு வந்த உதயநிதி, குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி ரூ. 5 லட்சம் வழங்கினார்.

அவர் கூறியதாவது:5 ஆண்டுகளாக நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி வருகிறோம். அனைவருக்கும் சம வாய்ப்பு இல்லை. ஏழை மாணவர்கள் மருத்துவராகும் கனவை தகர்க்க நீட் தேர்வை நடத்துகின்றனர். மறைந்த முதல்வர் ஜெ., கூட நீட் தேர்வை வேண்டாம் என்றார். இந்த ஆட்சி எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 2 நாட்களுக்கு முன் கூட அரியலுார் விக்னேஷ் தற்கொலை செய்து கொண்டார்.

மாணவர்கள் தைரியமாக இருக்க வேண்டும் என முதல்வர் கூறுகிறார். அ.தி.மு.க., நீட் தேர்விற்கு எதிர்ப்பு என்கின்றனர். ஆட்சியை கையில் வைத்து கொண்டு நீட் தேர்வை ரத்து செய்ய முடியவில்லை என்றால் எதற்கு இருக்கிறீர்கள். ஜல்லிகட்டிற்கு தமிழக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். மாணவர்கள் போராட்டத்தை நிறுத்த டெல்லிக்கு சென்று ஒரே நாளில் முடித்து வைத்த அரசு நீட் தேர்வு ரத்திற்கு ஏன் செய்யவில்லை. இது போன்று இனி நீட் தேர்வினால் உயிர் போக கூடாது. 8 மாதத்தில் நல்ல முடிவு கிடைக்கும். நீட் தேர்வை ரத்து செய்யும் வரை தி.மு.க., போராடும், என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X