சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பேரூராட்சி ஊழியர் மர்மச்சாவுபோலீஸ் விசாரணை

Added : செப் 13, 2020
Share
Advertisement

நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் பேரூராட்சி ஊழியர் செல்வன் 35, ரோட்டில் படுகாயத்துடன் இறந்து கிடந்தார்.

இறப்பில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் புகார் தெரிவித்ததை தொடர்ந்து போலீசார் விசாரிக்கிறார்கள்.அஞ்சுகிராமம் அருகே வாரியூரை சேர்ந்தவர் செல்வன். அஞ்சுகிராமம் பேரூராட்சி ஊழியர். இவர் செப்.,1ல் மேட்டுக்குடியிருப்பு தங்க நாற்கர சாலையில் மோட்டார் சைக்கிளுடன் படுகாயம் அடைந்து கிடந்தார்.

தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். இவரது சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் அளித்த புகாரில் அஞ்சுகிராமம் போலீசார் விசாரிக்கிறார்கள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X