சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மதுரை மருத்துவக்கல்லுாரி மாணவர்குமரி கிணற்றில் சடலமாக மீட்பு

Added : செப் 13, 2020
Share
Advertisement

நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே முகிலன்விளையை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் சீனிவாசனின், மூன்றாவது மகன் சிவனேஷ் 22. மதுரை தனியார் மருத்துவக்கல்லுாரியில் நான்காம் ஆண்டு பயின்று வந்த நிலையில் வீட்டு தோட்டத்து கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.

சாவுக்கான காரணம் பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது. கொரோனா ஊரடங்கால் சிவனேஷ் முகிலன்விளை வீட்டில் இருந்தார். நேற்று காலை பல் தேய்க்க தோட்டத்துக்கு சென்ற சிவனேஷ், நீண்டநேரம் ஆகியும் வரவில்லை. சீனிவாசன் தேடிச்சென்றபோது கிணற்றில் பிணமாக கிடந்தார். தீயணைப்புத்துறையினர் உடலை மீட்டனர். சாவுக்கான காரணம் தெரியவில்லை.

மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்தாரா அல்லது யாராவது மறைந்திருந்து தாக்கி கொலை செய்து உடலை கிணற்றில் வீசினார்களா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடக்கிறது. சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X