அரசியல் செய்தி

தமிழ்நாடு

நீட் தேர்விற்கு எதிரான போராட்டம் ஸ்டாலினுக்கு வழிகாட்டுகிறார் எச்.ராஜா

Added : செப் 13, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

திருப்புவனம்:''நீட் தேர்வு வழக்கு நளினி சிதம்பரத்தின் வாதத்தால் தான் முடிந்தது. தி.மு.க., தலைவர் ஸ்டாலின் நீட் தேர்வை எதிர்த்து போராட்டம் நடத்த வேண்டியது சிதம்பரம் வீட்டு வாசலில் தான்,'' என பா.ஜ., தேசிய செயலர் ராஜா தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் பா.ஜ., செயற்குழு கூட்டம் நடந்தது.எச்.ராஜா பேசியதாவது: நீட் தேர்வு குறித்து தமிழகத்தில் பிரிவினை வாத சக்திகள் மாணவர்களை பயமுறுத்திய காரணத்தால் சில மாணவர்கள் தேர்வு பயத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

பிளஸ் 2 வில் மார்க் குறைவு என்றும் மார்க் குறைவாக வரும் என்றும் பலரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதற்காக பிளஸ் 2 தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கூற முடியுமா. காதல் தோல்வியால் பலரும் தற்கொலை செய்கின்றனர். அதற்காக காதலிப்பது தவறு என்று சட்டம் இயற்றினார்களா.

ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் என்ற பெயரில் ஹிந்தி எழுத்துகளை தார் பூசி அழித்தார்களே. கனிமொழியின் மகன் ஹிந்தி பேசுகிறாரே அதை தடுப்பார்களா, தமிழகத்தில் பிரிவினை வாத சக்திகள் மத்திய மாநில அரசுகளை எதிர்த்து பிரச்னை செய்து வருகின்றன, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chennai B.S - Chennai,இந்தியா
13-செப்-202009:15:15 IST Report Abuse
Chennai B.S அருமை நண்பருக்கு நீங்கள் மட்டும் அணைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று உங்கள் தலைமையில் வீதிக்கு வாருங்கள் அணைத்து திராவிட கட்சிகளும் காளி
Rate this:
13-செப்-202012:21:14 IST Report Abuse
ஆரூர் ரங்ஏற்கனவே அனைத்து சாதியினரும் அர்ச்சகர்களாக பூசாரிகளாக இருக்கிறார்கள். கிராமங்களிலுள்ள குலதெய்வக் கோவில்களில் பலசாதியினரும் பூசாரிகளாக இருப்பதைப் பார்க்கலாம். H ராஜாவின் குலதெய்வக்🙏 கோவிலின் பூசாரி பட்டியலினத்தவர்தான்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X