பொது செய்தி

தமிழ்நாடு

நல்லாசிரியர் விருது வழங்கும் விழா

Added : செப் 13, 2020
Share
Advertisement

மதுரை : மதுரையில் 14 ஆசிரியர்களுக்கு மாநிலநல்லாசிரியர் விருது வழங்கும் விழா கலெக்டர் வினய் தலைமையில் நடந்தது.

முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் வரவேற்றார். அமைச்சர் செல்லுார் ராஜூ ஆசிரியர்களுக்குவெள்ளி பதக்கம், சான்று, ரூ.10 ஆயிரம் வழங்கி பேசினார்.மாநில அளவில் டி.என்.டி.பி., ஆசிரியர் தளத்தில் அதிக வீடியோக்கள் பதிவேற்றம் செய்ததற்காக தலைமையாசிரியர் சரவணன், ஆசிரியர் முத்துச்செல்வம் ஆகியோருக்குசிறப்பு விருதும், தேசிய நல்லாசிரியர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட உடற்கல்வி ஆசிரியர் காட்வினுக்கு பாராட்டு சான்றும் வழங்கப்பட்டது.

விழா துவங்கும்முன் அமைச்சர் உதயகுமார் ஆசிரியர்களை கவுரவித்தார்.மாநகராட்சி கமிஷனர் விசாகன், எம்.எல்.ஏ.,க்கள் ராஜன்செல்லப்பா, மாணிக்கம், டி.இ.ஓ.,க்கள் முத்தையா, பங்கஜம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.தலைமையாசிரியர்கள் சின்னதுரை,ராஜசேகர்,தென்கரை முத்துப்பிள்ளை உள்ளிட்டோர் விழா ஏற்பாடுகளை செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X