சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இன்ஸ்டாகிராமால் ஏமாந்த கல்லுாரி மாணவி ஆறரை பவுன் நகையை பறிகொடுத்தார்

Added : செப் 13, 2020
Share
Advertisement

திண்டுக்கல்:சமூக வலைத்தளம் இன்ஸ்டாகிராம் பழக்கத்தால் திண்டுக்கல் மாணவியிடம் 6.5 பவுன் நகையை அபகரித்த சேலம் பொறியாளரை போலீசார் தேடுகிறார்கள்.

சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதி பொறியாளர் அருள்ராஜ் 24. இவருக்கும் திண்டுக்கல் கல்லுாரி மாணவிக்கும் இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டது. மாணவியை பார்க்க அருள்ராஜ் காரில் திண்டுக்கல் வந்தார். இருவரும் நகரில் உலா வந்த பின் பஸ் ஸ்டாண்ட் வந்தனர்.அப்போது அருள்ராஜ், 'நாகல்நகரில் இருக்கும் பெற்றோரை அழைத்து வருகிறேன். தனியாக இருப்பதால் உனது நகைகளை கழற்றி கைப்பையில் போட்டு காரில் வைத்துவிடு' என்றார்.

மாணவி நகை அடங்கிய கைப்பையை காரில் வைக்க, காருடன் அருள்ராஜ் புறப்பட்டார்.சிறிது நேரத்தில் திரும்பியவர், 'கைப்பையை வைத்து கொண்டு இங்கேயே நில். பெற்றோர் வேறு இடத்தில் உள்ளனர். சில நிமிடங்களில் வந்துவிடுகிறேன்' என்று கூறி சென்றவர் பலமணி நேரம் ஆகியும் திரும்பவில்லை. சந்தேகமடைந்த மாணவி பையை திறந்தபோது அருள்ராஜை போலவே நகையும் மாயமாகி இருந்தது. ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மாணவி போலீசில் புகார் அளித்துள்ளார். விசாரணை நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X