தமிழ்நாடு

பி.எம். கிசான் திட்டத்தில் 'சுருட்டியவர்கள்' யார்... தகுதியற்றவர்கள் பெயர் பட்டியல் தயார்

Added : செப் 13, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
  பி.எம். கிசான் திட்டத்தில் 'சுருட்டியவர்கள்' யார்... தகுதியற்றவர்கள் பெயர் பட்டியல் தயார்



மதுரை :மதுரை மாவட்டத்தில் பிரதமர் வேளாண் உதவித்தொகை திட்டத்தில் வழங்கப்பட்ட நிதியை வங்கி கணக்கில் இருந்து முழுவதுமாக எடுத்த தகுதியற்ற விவசாயிகள் பெயர் பட்டியலை ஊராட்சி, தாலுகா
அலுவலகங்களில் ஒட்ட அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இத்திட்டத்தில் 11,135 பேர் தகுதியற்றவர்கள் பணம் பெற்றது கண்டறியப்பட்டது. இவர்களின் வங்கிகணக்கில் இருந்த ரூ.75.80 லட்சத்தை 13 ஒன்றியங்களிலும் விசாரணை குழுவினர் திரும்ப வசூலித்தனர்.
தகுதியற்ற விவசாயிகள் பலர் தங்கள் வங்கி கணக்கில் இருந்த முழுத்தொகைகையும் எடுத்துள்ளது விசாரணையில் தெரிய வந்தது.
இத்தொகை ரூ.பல லட்
சம் இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. அலைபேசிமூலம் தகுதியற்ற விவசாயிகளை தொடர்பு கொண்டு விசாரணை குழுவினர் பணத்தை திரும்ப பெற்று வருகின்றனர். இதனால் பலர் அலைபேசிகளையும் 'சுவிட்ச் ஆப்' செய்து விட்டனர். அவர்கள் பெயர் பட்டியலை ஊராட்சி மன்றம், ஊராட்சி ஒன்றியம், தாலுகா அலுவலகங்களில் ஒட்ட வேளாண் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மேலும் சில கம்ப்யூட்டர், இ சேவை மையங்களில் அதிக விண்ணப்பங்களை பெற்று இத்திட்டத்தில் தகுதியற்றவர்களை சேர்த்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து விசாரணை குழுவினர் ஆலோசித்து வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
13-செப்-202004:43:56 IST Report Abuse
J.V. Iyer இப்படி பணத்தை தவறாக சுருட்டியவர்களை ஒரு ஐந்து வருடங்கள் வோட்டு போட அனுமதிக்க கூடாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X