கோர்ட் செய்தி

தமிழ்நாடு

நீர்வடிப்பகுதி மேம்பாட்டு திட்ட பணியாளர்களை வேறு திட்டத்தில் ஈடுபடுத்த முடியுமா உயர்நீதிமன்றம் கேள்வி

Added : செப் 13, 2020
Share
Advertisement

மதுரை:நீக்கம் செய்யப்பட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டுத் திட்ட பணியாளர்களை வேறு திட்டப் பணிக்கு பயன்படுத்த முடியுமா என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மதுரை தல்லாகுளம் தங்கப்பாண்டி உட்பட சிலர் தாக்கல் செய்த மனு: மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவியுடன் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நீர்வடிப்பகுதி மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இதில் எங்களைப்போல் 273 பேர் பணி நியமனம் செய்யப் பட்டனர். இத்திட்டத்தில் பண்ணைக் குட்டைகள், தடுப்பணைகள் அமைத்தல், மழைநீர் சேகரிப்பு, விவசாயிகளுக்கு மானிய விலையில் மரக்கன்றுகள் வழங்குதல் உட்பட பல்வேறு பணி மேற்கொள்ளப்படுகிறது.

எங்களை மாநில திட்ட முகமை தலைமை செயல் அலுவலர் பணி நீக்கம் செய்ய உத்தர விட்டார். திட்டப் பணி முழுமையடையவில்லை. நாங்கள் நடுத்தர வயதை கடந்துவிட்டோம். இனி புதிதாக மாற்று வேலை தேட இயலாது. பணி நீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். மீண்டும் பணியில் தொடர அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டனர்.

நீதிபதி ஆர்.சுரேஷ்குமார்: மனுதாரர்களை பல ஆண்டுகளாக திட்டப் பணியில் ஈடுபடுத்தி உள்ளனர். அவர்களை திடீரென பணி நீக்கம் செய்வதால் பாதிக்கப்படுவர். திட்டப் பணியில் 100 சதவீதம் முடிந்துள்ளதா, முடியவில்லை எனில் அப்பணியில் மனுதாரர்களை ஈடுபடுத்த இயலுமா, இல்லையெனில் வேறு திட்டப் பணியில் மனுதாரர்களை ஈடுபடுத்த முடியுமா என செப்.,21 ல் மாநில திட்ட முகமை தலைமை செயல் அலுவலர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X