அரசியல் செய்தி

தமிழ்நாடு

2 ஜி வழக்கை திசை திருப்பவே ஹிந்தி எதிர்ப்பு டி சர்ட் பிரசாரம்: காயத்ரி ரகுராம் பேட்டி

Added : செப் 13, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

மதுரை:''2 ஜி வழக்கு விரைவில் வரவுள்ளதால் திசை திருப்பவே தி.மு.க., ஹிந்தி எதிர்ப்பு டிசர்ட் பிரசாரத்தை எடுத்துள்ளது,'' என மதுரையில் பா.ஜ., கலை, கலாசார பிரிவு மாநில தலைவர் நடிகை காயத்ரி ரகுராம் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: பிரதமர் மோடி செயல்படுத்தி வரும் திட்டங்களால் மக்கள் ஆதரவு பா.ஜ.,விற்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது காங்., தி.மு.க., போன்ற எதிர்கட்சிகளுக்கு பொறுக்க முடியவில்லை.தமிழ் தாய் மொழி என்றால் ஹிந்தி நட்பு மொழி என மக்கள் கருதுகின்றனர்.

இன்றைய காலகட்டத்தில் மக்கள் எல்லா மொழிகளையும் அறிந்து கொள்ள வேண்டும். வாழ்வில் முன்னேற வேண்டும் என விரும்புகின்றனர். மக்கள் முன்னேறுவது தி.மு.க.,விற்கு பிடிக்கவில்லை.

தி.மு.க.,வை பொறுத்தவரையில் அதன் தலைவர் ஸ்டாலின் குடும்பம் முன்னேறினால் போதும். இதனால் சிறிய நடிகர் மூலம் ஹிந்தி எதிர்ப்பு டி சர்ட் பிரசாரத்தை எடுத்துள்ளது. அவர்களுக்கு ஹிந்தி பட வாய்ப்பு வந்தால் டி சர்ட்டை கழற்றி விடுவர்.

மேலும் 2 ஜி வழக்கு விரைவில் வரவுள்ளதால் திசை திருப்ப கனிமொழி எம்.பி.,யும் இதை கையில் எடுத்திருக்கிறார். அவருக்கு ஹிந்தி தெரியும். ஆனால் அரசியலுக்காக தெரியாது என நாடகமாடுகிறார் என்றார். கலை, கலாசார பிரிவு மாவட்ட தலைவர் வெங்கடேஸ்வரன் உடனிருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Baskar - Paris,பிரான்ஸ்
13-செப்-202015:21:35 IST Report Abuse
Baskar டி ஷார்ட் விளம்பரங்கள் ஹிந்தி எதிர்ப்புக்கு மட்டும் அல்ல. 2 ஜி உலகமாக ஊழல்கள் கூடக அறிவாலய மனைப்பட்டா விஷயங்கள் எல்லாவற்றுக்கும் சேர்த்து தான் இந்த டி ஷார்ட் விளம்பரம். .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X